யாரா இருந்தாலும் ரூல்ஸ்னா ரூல்ஸ் தான்...! 'விதிமுறையை மீறிய அம்மா...' 'டூட்டிக்கு சேர்ந்த முதல் நாளே...' - அம்மா மேல ஆக்சன் எடுத்த மகன்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மும்பையில் தன் தாயின் கடையையே பறிமுதல் செய்த நகராட்சி ஊழியரை அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.

யாரா இருந்தாலும் ரூல்ஸ்னா ரூல்ஸ் தான்...! 'விதிமுறையை மீறிய அம்மா...' 'டூட்டிக்கு சேர்ந்த முதல் நாளே...' - அம்மா மேல ஆக்சன் எடுத்த மகன்...!

மும்பை மராட்டிய மாநிலம் அமகத் நகர் மாவட்டம் பதார்டி டவுன் மெயின் பஜார் பகுதியில் வசித்து வருகிறார் 36 வயதான ரஷீத் சேக். இவர் பதார்டி நகராட்சியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

தற்போது கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வருவதால் மாநகராட்சி சார்பில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை அமல்படுத்த அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.

ரஷீத் சேக்க்கும் பறக்கும் படையில் இடம்பெற்று உள்ளார். இந்நிலையில் பணிக்கு நுழைந்த முதல் நாளே முதல் சம்பவமாக அவரின் தாயார், வீட்டின் அருகே தள்ளுவண்டியில் வைத்த காய்கறி கடையை பறிமுதல் செய்தார். மேலும் அந்த காய்கறிகளை நகராட்சி வண்டியில் அள்ளிப்போட்டார். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இதுகுறித்து கூறிய ரஷீத் சேக், 'எங்கள் மாவட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வருகிறது. இதனால் பல கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி நடக்கவேண்டியது நமது கடமை.

அதோடு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வீதி, வீதியாக சென்று காய்கறி விற்க தடை இல்லை. ஆனால் வீதிகளில் ஓரிடத்தில் அமர்ந்தோ அல்லது கூடாரம் அமைத்தோ காய்கறி வியாபாரம் செய்ய அனுமதி இல்லை.

இந்த அறிவிப்பு குறித்து முன்பே நான் என் அம்மாவிடம் கூறியிருந்தேன். ஆனால் விதிமுறையை மீறி தள்ளுவண்டியை ஓரிடத்தில் நிறுத்தி வியாபாரம் செய்ததால், இந்த நடவடிக்கையை எடுத்தேன். யாராக இருந்தாலும் எல்லோருக்கும் விதிமுறை என்பது பொது, அதன்படி தான் நான் நடந்து கொண்டேன்' எனக் கூறினார் ரஷீத் சேக்.

மேலும் ரஷீத் சேக்கின் இந்த நடவடிக்கைக்கு நகராட்சி கமிஷனர் தனஞ்செய் கோலேகர் வெகுவாக பாராட்டினார். அதில் அவர், எங்களது நகராட்சி ஊழியர் ரஷீத் சேக் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்