'மாமரத்த' வெட்டாம இங்க 'வீடு' கட்ட சாத்தியமே இல்லையே...! 'அப்படியா சொல்றீங்க...' - அனைவர் 'வாயையும்' அடைக்க வைத்த நபர்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் 40 அடி உயரத்தில் இருக்கும் மாமரத்தில் வீடு கட்டி வாழும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்த பிரதீப் சிங் என்பவர், 40 அடி உயர மாமரத்தின் மேலே மூன்று மாடி வீட்டை கட்டியுள்ளார். மரத்தின் மேல் இருக்கும் இந்த வீட்டில் இரண்டு படுக்கையறைகள், ஒரு சமையலறை, ஒரு நூலகம் மற்றும் ஒரு லிவ்விங் ரூம் உள்ளது.
பிரதீப் சிங் என்ற தொழிலாதிபர் தன்னுடைய கனவு இல்லத்தை கட்டுவதற்கு பல இடங்கள் தேடி அலைந்துள்ளார். சுமார் 1999-ஆம் ஆண்டு தான் தனது கனவு இல்லத்தை கட்டுவதற்கான சரியான இடத்தை கண்டறிந்தார் பிரதீப் சிங்.
மரங்கள் நிறைந்த இந்த பகுதியில் மக்களை தொகை அதிகரிக்க அதிகரிக்க மரங்களை வெட்டி மக்களை தங்கள் இருப்பிடங்களை வளர்த்து கொண்டனர். ஆனால். மா மரங்கள் நிறைந்த இந்த அழகிய இடத்தை கண்ட பிரதீப் சிங் தனக்கென ஒரு பகுதியை வாங்கியுள்ளார்.
மரங்கள் நிறைந்த இந்த இடம் அவர் மனதை கவர்ந்து தனது கனவு வீட்டை கட்டும் பணியில் இறங்கியுள்ளார். இதில் சுவரஷ்யமான விஷயம் என்னவென்றால் கட்டுமான பணியின் போது ஒரு மரம் கூட வெட்டப்படக்கூடாது என்பதே. இவரின், இந்த முடிவை அனைவரும் சாத்தியமற்றது, நடக்காது என கூறியுள்ளனர்.
எதற்கும் மனம் தளராத பிரதீப் சிங், அதை சவாலாக எடுத்துக்கொண்டு மாமரம் இருந்த நிலத்தை நியாயமான விலை கொடுத்து வாங்கி கட்டிடக் கலைஞரின் உதவியுடன் வீட்டின் கட்டுமான பணியை ஒரு வருடத்தில் முடித்துள்ளார்.
அவர் கட்டிய மரங்கள் சுமார் 20 அடி உயரம் இருந்தபோதே, இரண்டு தளங்களுடன் வீடு கட்டப்பட்டதுள்ளது. வீட்டின் முழு அமைப்பும் இரும்பு ஸ்டீலாலும், வீட்டின் சுவர்கள் மற்றும் தளங்கள் செல்லுலோஸ் ஷீட் மற்றும் ஃபைபராலும் கட்டப்பட்டன.
மரத்தைச் சுற்றி நான்கு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவை மின்னலின் போது மின் கடத்தியாகச் செயல்பட்டு, வீட்டை பாதுகாக்கின்றது. மரத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப வீட்டின் கட்டமைப்பில் தேவையான மாற்றங்களை செய்தும் வருகிறார்.
அதோடு, அவர் வசிக்கும் மர வீட்டில் வசிக்கும் பறவைகள் மற்றும் சிறிய விலங்குகளை தங்கள் குடும்ப உறுப்பினர்கள் போலவே பாவித்து வருகின்றனர் பிரதீப் சிங்.
மற்ற செய்திகள்