எனக்கு 'coding' ரொம்ப புடிக்கும்...! 'அந்த ஒரு' வார்த்தைக்காக பெரிய கம்பெனிகள் வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க...' - வந்த எல்லார விடவும் 'சேலரி பேக்கேஜ்' இவங்களுக்கு தான் அதிகமாம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் அமெரிக்காவில் ஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பளத்துடன் கூடிய வேலையை பெற்று தலைப்பு செய்திகளில் இடம் பிடித்துள்ளார்.

எனக்கு 'coding' ரொம்ப புடிக்கும்...! 'அந்த ஒரு' வார்த்தைக்காக பெரிய கம்பெனிகள் வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க...' - வந்த எல்லார விடவும் 'சேலரி பேக்கேஜ்' இவங்களுக்கு தான் அதிகமாம்...!

ஐதராபாத்தை சேர்ந்த தீப்தி நர்குட்டி (Deepthi Narkuti) என்ற இளம்பெண் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறார். ஐதராபாத்தைச் சேர்ந்த தீப்தி, உஸ்மானியா பொறியியல் கல்லூரியில் தனது பொறியில் படிப்பை முடித்துள்ளார்.

இவரின் தந்தை டாக்டர் வெங்கண்ணா ஐதராபாத்தில் தடயவியல் நிபுணராக பணியாற்றுகிறார்.

இந்நிலையில் தீப்தி அமெரிக்காவில் அண்மையில் நடத்தப்பட்ட நேர்காணலில் (campus interview) தனது திறமையை நிரூபித்து வைரலாகி உள்ளார்.

இளநிலை படிப்பை இந்தியாவில் படித்த தீப்தி, தனது முதுநிலை படிப்பைத் தொடர அமெரிக்காவில் தொடர திட்டமிட்டார். அதற்கு பொருளாதார ரீதியாக உதவி தேவைப்படவே அமெரிக்காவுக்குச் செல்வதற்கு முன்பு JPMorgan Chase நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக 3 ஆண்டுகள் பணியாற்றினார்.

அதன்பின் தனது விடா முயற்சியால் ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் ஸ்காலர்ஷிப் பெற்ற அவர் சமீபத்தில் தான் அந்த பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸில் முதுகலை பட்டம் பெற்றார்.

இந்நிலையில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் மிக பெரிய நிறுவனங்களான அமேசான், கோல்ட்மேன் மற்றும் சாச்ஸ் (Sachs)ஆகியவை எல்லாம் தீப்தியின் சரி என்ற வார்த்தைக்காக காத்திருந்தன.

யோசனைக்கு பின் தீப்தி மைக்ரோசாஃப்ட் நிறுவன வேலையே தேர்வு செய்துள்ளார். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் மென்பொருள் மேம்பாட்டு பொறியாளர் கிரேட் -2 குரூப் (software development engineer grade-2 group) போஸ்ட்டிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள தீப்திக்கு அந்நிறுவனம் ஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பளத்தை நிர்ணயித்துள்ளது.

தீப்தி தற்போது தனது திறமையால் வைரல் ஆகியுள்ள நிலையில், ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் நடந்த வளாக நேர்காணலின் போது அதில் பங்கேற்ற சுமார் 300 மாணவர்களில், மிக உயர்ந்த வருடாந்திர சேலரி பேக்கேஜை தீப்தி மட்டுமே பெற்று புகழடைந்துள்ளார்.

இதுகுறித்து கூறிய தீப்தி, 'எனக்கு கோடிங் ரொம்ப பிடிக்கும். எனக்கு பிடித்தத்தை படிக்கவேதான் இந்த அளவு நல்ல நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளேன். எதிர்காலத்தில் அன்றாட பிரச்சனைகளை தீர்க்க மற்றும் வாழ்க்கையை மாற்றுவதில் தொழில்நுட்பம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி உதவும்' என தீப்தி உறுதியாக நம்புகிறார்.

மற்ற செய்திகள்