எல்லாரும் சீக்கிரம் ஓடி வாங்க...! இது 'என்ன'னு தெரியுதா...? பார்க்க 'அது' மாதிரியே இருக்கு இல்ல...! எப்படி இந்த 'வடிவத்துல' ஆச்சு...? - குழம்பிய விவசாயிகள்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஒடிசாவில் விவசாயி ஒருவர் கொரோனா வைரஸ் வடிவில் இருக்கும் பொருள் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

எல்லாரும் சீக்கிரம் ஓடி வாங்க...! இது 'என்ன'னு தெரியுதா...? பார்க்க 'அது' மாதிரியே இருக்கு இல்ல...! எப்படி இந்த 'வடிவத்துல' ஆச்சு...? - குழம்பிய விவசாயிகள்...!

ஒடிசா மாநிலம் நபரங்கபூரை சேர்ந்தவர் ரவி கிரண். இவர் நேற்று (15-11-2021) விவசாயப் பணி ஒன்றிற்காக தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு தான் அந்த கொரோனா வடிவ பொருளை பார்த்துள்ளார்.

தோட்டத்தில் கொரோனா வைரஸின் வடிவம் கொண்ட வட்ட வடிவிலான பொருள் ஒன்று கிடந்துள்ளது. இதனையடுத்து அந்த பகுதியை சேர்ந்த மக்களை ரவி கிரண் அழைத்து கூறியுள்ளார்.

அந்த தோட்டம் சந்திர பூஜாரி என்பருக்கு சொந்தமானது ஆகும். அந்த பகுதியில் அவர் கடந்த முறை வெள்ளரிக்காய் விளைய வைத்துள்ளார். இந்த நிலையில் அனைத்து வெள்ளரிக்காய்களையும் அறுவடை செய்து விற்றுள்ளார். தரையில் ஒரு வெள்ளரிக்காய் மட்டும் புதைந்து யார் கண்ணிலும் படாமல் இருந்துள்ளது.

இதனைத்தான் அங்கு விவசாய பணிக்காக சென்ற ரவி கிரண் பார்த்து ஷாக் ஆகியுள்ளார். பார்ப்பதற்கு கொரோனா வைரஸ் போலவே இந்த வெள்ளரிக்காய் இருந்துள்ளது.

அந்த ஒரு வெள்ளரிக்காய் மட்டுமின்றி அருகிலேயே நிறைய வெள்ளரிக்காய்கள் கொரோனா வைரஸின் வடிவத்தில் இருந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடங்கிய போதே அதன் மேக்ரோ வடிவத்தை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டு இருந்தனர். உருளையான பந்து போன்ற வடிவத்தில் முற்கள் கொண்ட அதன் தோற்றத்தை வெளியிட்டு இருந்தனர்.

அந்த விவசாய தோட்டத்தில் அவர் கண்டுபிடித்த வெள்ளரிக்காயும் இதே வடிவத்தில் தான் இருந்துள்ளது. இதனையடுத்து, இந்த சம்பவம் வேகமாக அந்த பகுதியில் பரவியது. உடனடியாக விவசாயிகள், மக்கள் பலர் அந்த இடத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வெள்ளரிக்காய் ஏன் இப்படி கொரோனா  வைரஸ் போன்று தோற்றம் அளிக்கிறது என்று இன்னும் தெளிவான உண்மையை கண்டறிய முடியவில்லை. ஏதேனும் ரசாயன மருந்தால் இப்படி ஆகி இருக்கலாம். அல்லது மரபணு மாற்றம் காரணமாக இந்த வடிவம் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

CUCUMBER, CORONA, FARMER, ODISHA

மற்ற செய்திகள்