'அம்மா, அப்பா 2 பேருக்கும் கொரோனா பாஸிட்டிவ்...' 'நெகட்டிவ் ரிப்போர்ட் வந்த 6 மாச குழந்தைய...' தற்காலிகமா தத்தெடுத்து அம்மாவான டாக்டர்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா பாதிப்படைந்த செவிலியரின் 6 மாத குழந்தையை, கொச்சியை சேர்ந்த பெண் ஒருவர் தற்காலிகமாக தத்தெடுத்து வளர்க்கும் சம்பவம் இணையத்தில் பரவி அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.

'அம்மா, அப்பா 2 பேருக்கும் கொரோனா பாஸிட்டிவ்...' 'நெகட்டிவ் ரிப்போர்ட் வந்த 6 மாச குழந்தைய...' தற்காலிகமா தத்தெடுத்து அம்மாவான டாக்டர்...!

ஹரியானாவில் செவிலியர்களாக பணிபுரிந்து வந்த கேரளாவின் எர்ணாகுளத்தை சேர்ந்த தம்பதிகளுக்கு 2 வயது மகள் மற்றும் 6 மாத ஆண் குழந்தையும் உள்ளது. துரதிஷ்டவசமாக 2 வாரங்களுக்கு முன்பு அக்குடும்ப தலைவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, ஹரியானாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தன் குழந்தைகளுக்கு எவ்வித ஆபத்தும் வர கூடாது எண்ணிய அவரின் மனைவி தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு கேரளா வந்தடைந்தார். தனிமைப்படுத்தப்பட்ட அப்பெண்மணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தனது 2 வயது மகளைத் தனது தாயாரிடம் அப்பெண் ஒப்படைத்து மருத்துவ சிகிச்சையில் உள்ளார்.

ஆனால் அவருடைய 6 மாத ஆண் குழந்தைக்கு கொரோனா நெகட்டிவ் ஆகியுள்ளது. இந்நிலையில் அந்தக் குழந்தையைக் கவனித்துக் கொள்ள யாரேனும் தன்னார்வலர் வேண்டும் என எர்ணாகுளம் குழந்தைகள் நல வாரியம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

6 மாத குழந்தை என்பதால் பலரும் தத்தெடுக்க வர தயங்கிய நிலையில், கொச்சியைச் சேர்ந்த மருத்துவர் மேரி அனிதா (48) என்ற பெண் குழந்தையைப் பராமரிக்க முன்வந்தார். அவரின் இந்த செயலுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.

மேலும் 6 மாத குழந்தையை கவனிப்பது சிறிது கடினமாக எண்ணப்படும் சூழலில், மேரி அனிதா முழு நேரமும் குழந்தையுடன் தன் நேரத்தை செலவழித்து வருகிறார். மேலும் அப்பா அம்மாவின் ஞாபகத்தில்  அழுத அந்தக் குழந்தை தற்போது அனிதாவிடம் நன்றாகப் பழகிவிட்டது.

மேலும் இருவரும் பொம்மைகளை வைத்து விளையாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் குழந்தையின் பெற்றோருடன் வீடியோ கால் செய்து குழந்தை மற்றும் பெற்றோரை இணைக்கும் பாலமாகவும் அனிதா செயல்பட்டு வருகிறார்.

மற்ற செய்திகள்