'வாய்ப்பில்லை ராஜா'... 'பெட்டி எங்க பா, 92 வயதில் கெத்து காட்டிய பாட்டி'... 'கலெக்டர்' வரை போன தேர்தல் அதிகாரிகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வயதுக்கும், தனக்கான உரிமை குறித்த கேள்வியை எழுப்புவதற்கும்  தொடர்பில்லை என நிரூபித்துள்ளார் 92 வயது மூதாட்டி ஒருவர்.

'வாய்ப்பில்லை ராஜா'... 'பெட்டி எங்க பா, 92 வயதில் கெத்து காட்டிய பாட்டி'... 'கலெக்டர்' வரை போன தேர்தல் அதிகாரிகள்!

தற்போது தேர்தல் காலம் என்பதால் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேநேரத்தில் கொரோனா பிரச்சினை காரணமாக இம்முறை வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்களிக்கும் நேரமும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

அதோடு முதியவர்கள் வாக்குச்சாவடிக்குச் செல்லாமல் முன்கூட்டியே தபால் வாக்குகள் அளிக்கவும் தேர்தல் கமி‌ஷன் ஏற்பாடு செய்துள்ளது. தபால் வாக்குப்பதிவு தற்போது தொடங்கி நடந்து வருகிறது. அந்த வகையில் தேர்தல் அதிகாரிகள் முதியவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு நேரில் சென்று அவற்றைச் சேகரித்து வருகிறார்கள். அவை கட்டை பைகளில் சேகரிக்கப்பட்டு வருகிறது.

92-year-old woman voter refuses to place her postal ballot in bag

இந்நிலையில் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கொல்லம்பரம்பில் பகுதியைச் சேர்ந்த 92 வயது மூதாட்டி பவானி அம்மா என்பவர் தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்து இருந்தார். இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் தபால் வாக்குச் சீட்டை பெற்றுக்கொள்ளப் பவானி அம்மா வீட்டிற்குச் சென்றனர். அங்குக் கட்டை பையை நீட்டி அதில் தபால் வாக்கைப் போடும்படி அதிகாரிகள் கூறினர்.

ஆனால் கட்டை பையைப் பார்த்த பவானி அம்மா, இதில் எப்படி என்னுடைய வாக்கைப் போட முடியும் எனக் கேள்வி கேட்டுள்ளார். இந்த பையில் என்னுடைய வாக்கை எப்படி நம்பி போடுவது, அது எப்படிப் பாதுகாப்பாக இருக்கும் எனக் கேள்வி மேல் கேள்வி கேட்டு அதிகாரிகளைத் துளைத்து எடுத்துள்ளார். அதோடு இந்த பையில் போடும் வாக்குச் சீட்டு எண்ணப்படுமா என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

92-year-old woman voter refuses to place her postal ballot in bag

எனவே நீங்கள் மூடி முத்திரையிட்ட பெட்டி கொண்டு வாருங்கள். அதில் தான் வாக்குச் சீட்டை போடுவேன் என்று ஒரே போடாக போட்டுள்ளார். மூதாட்டி தபால் ஓட்டை போட மறுத்தது குறித்து அங்கிருந்த தேர்தல் அதிகாரிகள் மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான அஞ்சனாவின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்கள். அவர் மூதாட்டி பவானி அம்மாவிடம் செல்போனில் பேசி சமரசம் செய்தார்.

இறுதியில் கலெக்டரின் சமரசத்தை ஏற்றுக்கொண்ட பவானி அம்மா அரைகுறை மனதுடன் தபால் வாக்கைப் பையில் போட்டார். இதையடுத்து பவானி அம்மாவின் மகன் சலீம் குமார் இதுபற்றி தேர்தல் கமி‌ஷனில் புகார் செய்தார். அதில் தனது தயார் தபால் வாக்குப்பதிவு செய்தபோது தேர்தல் அதிகாரிகள் அருகில் இருந்தனர். இது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது. இது பற்றி தேர்தல் கமி‌ஷன் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது புகாரில் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்