'முதியவரை' கட்டி வைத்த 'மருத்துவமனை'... காச 'ஃபுல்லா' குடுக்கலன்னு... 'இப்படி' எல்லாமா பண்ணுவாங்க!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவரை அந்த மருத்துவமனையின் நிர்வாகம் கை, கால்களை கட்டி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'முதியவரை' கட்டி வைத்த 'மருத்துவமனை'... காச 'ஃபுல்லா' குடுக்கலன்னு... 'இப்படி' எல்லாமா பண்ணுவாங்க!

மத்தியப்பிரதேச மாநிலம் ஷாஜாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் முதியவர் ஒருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்களால் சிகிச்சை கட்டுமான 11 ஆயிரம் ரூபாயை செலுத்த முடியவில்லை. முன்னதாக ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்துள்ள நிலையில், மீதிக் கட்டணத்தை தங்களால் கொடுக்க இயலவில்லை என அந்த முதியவரின் மகள் குறிப்பிட்டுள்ளார். அதனால் தனது தந்தையை மருத்துவமனை நிர்வாகம் கை, கால்களை கட்டி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அந்த முதியவரின் உடலில் எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வு உள்ள காரணத்தினால் தான் அவரது கை, கால்களை கட்டி வைத்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இல்லையென்றால் அந்த நபர் அங்குள்ள மற்ற பொருட்களை உடைக்கடக்கூடும் என்ற அச்சத்தினால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மனிதாபிமான அடிப்படடையில் அவரது மருத்துவ கட்டணத்தை தள்ளுபடி செய்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து மருத்துவமனையின் மீது மனித உரிமை மீறல் போன்றவற்றை கருத்தில் கொண்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்