'போதை பொருள் கும்பலுக்கு வச்ச பொறி'... 'ஆனா Wantedடா வந்து சிக்கிய 'வாந்தி'யை கடத்தும் கும்பல்'... 'ஒரு கிலோ 1½ கோடி'... பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

போதைப் பொருள் கடத்தும் கும்பலைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

'போதை பொருள் கும்பலுக்கு வச்ச பொறி'... 'ஆனா Wantedடா வந்து சிக்கிய 'வாந்தி'யை கடத்தும் கும்பல்'... 'ஒரு கிலோ 1½ கோடி'... பரபரப்பு சம்பவம்!

பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலைப் பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாகக் கிழக்கு மண்டல போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்பனை அதிகமாக உள்ளதால், அதில் ஈடுபடும் கும்பலைப் பிடிக்கத் தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.

இவ்வாறு போதைப்பொருட்கள் விற்பனை குறித்து போலீசார் விசாரித்த போது, கே.ஜி.ஹள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தோசுக்கு ஒரு முக்கிய தகவல் கிடைத்தது. அதாவது போதைப்பொருள் போன்ற ஒரு மர்மப் பொருளைப் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முயற்சி நடப்பதாகத் தெரியவந்தது.

80 kg of banned marine substance Ambergris seized in Bengaluru

இதையடுத்து, அந்த மர்ம பொருளை விற்க முயன்ற கும்பலைப் பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, கே.ஜி.ஹள்ளி போலீசார், திறமையாகச் செயல்பட்டு மர்மப் பொருளை விற்க முயன்றதாக 4 பேரைக் கைது செய்தார்கள். இவர்களில் சையத் நியாஜில் பாஷாவிடம் இருந்து ஒரு மர்மப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. அது குறித்து ஆய்வு செய்ய போது, திமிங்கல வாந்தி என்று தெரிந்தது. இந்த திமிங்கல வாந்தி அபூர்வமாகக் கிடைக்கக் கூடியதாகும். மருந்து பொருட்கள், வாசனைத் திரவியங்கள் தயாரிக்க திமிங்கல வாந்தி பெரிதும் பயன்படுகிறது.

இதன் காரணமாகச் சர்வதேசச் சந்தையில் திமிங்கல வாந்திக்கு கடும் கிராக்கி உள்ளது. ஒரு கிலோ திமிங்கல வாந்தி ரூ.1½ கோடி வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது கைதான 4 பேரிடம் இருந்து 6 கிலோ 700 கிராம் எடை கொண்ட திமிங்கல வாந்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சர்வதேசச் சந்தையில் அதன் மதிப்பு ரூ.8 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

80 kg of banned marine substance Ambergris seized in Bengaluru

இந்த திமிங்கல வாந்தியை விற்பனை செய்வது சட்டவிரோதமாகும். கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த திமிங்கல வாந்தி கிடைத்திருந்தது. அவருக்கு பணப்பிரச்சினை ஏற்பட்டதால் 6 கிலோ 700 கிராம் திமிங்கல வாந்தியை சுமார் ரூ.10 லட்சத்திற்கு மட்டுமே  சையத் நியாஜில் பாஷாவிடம் விற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்