நாட்டிலேயே 'இந்த' 8 நகரங்களில் தான் 'ரொம்ப' அதிகம்... 'சென்னை'க்கு எத்தனாவது எடம்?
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு வருகின்ற மே மாதம் 17-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி இருக்கிறது. நாடு முழுவதும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் அதிக பாதிப்பு உள்ள இடங்களுக்கு எந்தவித தளர்வையும் மத்திய, மாநில அரசுகள் அளிக்கவில்லை.
இந்த நிலையில் இந்தியா முழுவதும் உள்ள 8 நகரங்களில் மட்டும் 56.5% கொரோனா பாதிப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள கொரோனா பரவலில் மேற்கண்ட நகரங்களில் மட்டும் சரிபாதி கொரோனா பாதிப்புகள் இருக்கின்றன. இதனால் மேற்கண்ட நகரங்களில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.
கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் நகரங்கள்:-
1. மும்பை: 20%
2. டெல்லி: 11%
3. அகமதாபாத்: 9%
4. புனே: 4%
5. சென்னை: 4%
6. இந்தூர்: 3%
7. தானே: 3% (தோராயமாக)
8. ஜெய்ப்பூர்: 2.5%