‘இன்னும் 73 நாளில்.. கொரோனா மருந்து கைக்கு வருகிறதா?’ .. சீரம் நிறுவன தரப்பு விளக்கம் என்ன?
முகப்பு > செய்திகள் > இந்தியாஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் - அஸ்ட்ரா ஜெனெகா இணைந்து கண்டுபிடித்துள்ள ‛கோவிஷீல்ட்' தடுப்பூசி, அநேகமாக இன்னும் 73 நாட்களில் வணிகமயமாக்கப்படும் என பிசினஸ் டுடே அறிக்கையில் தகவல்கள் வெளியானதாகவும், இந்த கொரோனா தடுப்பூசி தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தின் (NIP) கீழ் இந்தியர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இந்த தகவலை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மறுத்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரசிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்க உலக நாடுகள் போட்டியில் உள்ள நிலையில், இந்தியாவில் 3 தடுப்பூசிகள் மனிதர்களுக்கான பரிசோதனை அளவில் இருப்பதாக தெரிவித்த மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவை இந்த ஆண்டுக்குள் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்திருந்தார்.
இந்தியாவின் சீரம் நிறுவனத்தால் மூன்றாம் கட்ட சோதனைகள் நேற்று (ஆக.,22) இந்தியாவின் 20 மையங்களில் தொடங்கப்பட்டதுடன், மஹாராஷ்டிராவின் புனே மற்றும் மும்பையிலும், குஜராத்தின் அகமதாபாத்திலும் 1,600 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தவிர, கோவிஷீல்ட் தவிர, ஐ.சி.எம்.ஆர் - பாரத் பயோடெக்கின் ‛கோவாக்சின்' (Covaxin) மற்றும் ஜைடஸ் காடிலாவின் ஜைகோவ்-டி' (ZyCoV-D) ஆகியவையும் தடுப்பூசி கண்டறிவதில் போட்டியிடுவதுடன், இந்த இரு தடுப்பூசிகளும் ஒரே நேரத்தில் மனித மருத்துவ பரிசோதனைகளில் முதல் மற்றும் இரண்டாவது கட்டத்தில் உள்ளது.
இந்நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் - அஸ்ட்ரா ஜெனெகா கண்டுபிடித்துள்ள தடுப்பூசியான கோவிஷீல்ட், 73 நாட்களில் தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தின் (என்ஐபி) கீழ் இந்தியர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று வெளியான தகவல்களில் உண்மை இல்லை என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மறுத்துள்ளது. எனினும் தற்போதைய பரிசோதனைக் கட்டங்களை கடந்த பின்னரே கொரோனா மருந்தை வணிகமயமாக்கும் முடிவு அறிவிக்கப்படும் என்றும் சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்