"தீபாவளிக்கு டூர் கூட்டிட்டு போறீங்களா.?".. கூட்டத்துல CM கிட்ட அன்புகோரிக்கை வச்ச சிறுமி.. அதுக்கு அவர் சொன்ன பதில் தான் செம்ம..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே-விடம் தன்னை தீபாவளிக்கு சுற்றுலா கூட்டிச் செல்லும்படி கோரிக்கை வைத்திருக்கிறார் சிறுமி ஒருவர்.
Also Read | உலக பணக்காரர்கள் பட்டியல்.. பில் கேட்ஸை பின்னுக்குத்தள்ளிய கவுதம் அதானி .. முழு விபரம்..!
ஏக்நாத் ஷிண்டே
மகாராஷ்டிரா மாநிலத்தின் சமீபத்தில் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார் ஏக்நாத் ஷிண்டே. 1964 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி மகாராஷ்டிராவிலுள்ள சத்தாரா பகுதியில் பிறந்த இவர் மும்பையில் உள்ள தானே பகுதியில் தான் வளர்ந்தார். இவருடைய பெற்றோர் கூலி வேலை செய்திருக்கின்றனர். குடும்ப சூழ்நிலை காரணமாக 11 ஆம் வகுப்பு மட்டுமே படித்த ஏக்நாத் ஷிண்டே, தானேவில் ஆட்டோ ஓட்டி அதன்மூலம் தனது குடும்பத்தினருக்கு உதவி வந்திருக்கிறார். அதன்பிறகு சிவசேனா கட்சியில் இணைந்து படிப்படியாக வளர்ந்து இன்று அந்த மாநிலத்தின் முதல்வராகவே உயர்ந்திருக்கிறார்.
கேள்வி
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நந்தன்வன் பங்களாவில் விளம்பர நிறுவன அதிகாரியான சாகேத் தாமரே என்பவரை ஷிண்டே சந்தித்தார். அப்போது சாகேத் தாமரே-வின் மகள் அன்னடா-வும் அங்கு இருந்திருக்கிறார். 2 ஆம் வகுப்பு படிக்கும் அன்னடா ஷிண்டேவிடம்," தீபாவளிக்கு என்னை கௌஹாத்திக்கு சுற்றுலா கூட்டிச் செல்கிறீர்களா?" எனக் கேட்டார். இதனை கேட்டு ஷிண்டே வெடித்துச் சிரிக்கவே அங்கிருந்த அதிகாரிகள் அனைவரும் சிரித்திருக்கிறார்கள்.
சமீபத்தில் சிவசேனா கட்சியை சேர்ந்த 40 MLA-களுடன் ஷிண்டே கௌஹாத்தியில் தங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அன்னடா தன்னை கௌஹாத்திக்கு டூர் அழைத்துச் செல்லுமாறு கூறவே, அங்கு இருந்தவர்கள் அனைவரும் சிரித்திருக்கிறார்கள்.
கோவில்
அன்னடாவின் கேள்விக்கு சிரிப்புடன் பதில் அளித்த ஷிண்டே,"தேவியை தரிசனம் செய்ய காமாக்யா கோவிலுக்கு செல்வோம்" என்றார். அஸ்ஸாம் மாநிலத்தின் நிலாச்சல் மலைத்தொடரில் அமைந்துள்ளது இந்த காமாக்யா கோவில். இது அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். நடப்பு அரசியல் அறிவுடன் கேள்விகேட்ட அன்னடாவை ஷிண்டே பாராட்டியிருக்கிறார்.
மேலும், தனக்கு முதல்வர் ஆகவேண்டும் என்ற கனவு இருப்பதாகவும் அதன்மூலம் மக்களுக்கு சேவை செய்ய விருப்பப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார் அன்னடா. இதனைக்கேட்டு மகிழ்ந்த ஷிண்டே,"நிச்சயமாக ஏன் முடியாது. உங்களுக்காக ஒரு சிறப்பு இட ஒதுக்கீட்டு திட்டத்தை நாங்கள் கொண்டு வருவோம்" என்றார். இது அங்கிருந்தவர்களை நெகிழ செய்திருக்கிறது.
மற்ற செய்திகள்