'மூச்சு விடமுடியல'... நடுவானில் கதறிய பயணி... 'திருச்சி' ஏர்போர்ட்டில் தயாராக இருந்த மருத்துவக்குழு... கடைசியில் நடந்த துயரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த மலேசிய பயணி நடுவானில் திடீரென இறந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

'மூச்சு விடமுடியல'... நடுவானில் கதறிய பயணி... 'திருச்சி' ஏர்போர்ட்டில் தயாராக இருந்த மருத்துவக்குழு... கடைசியில் நடந்த துயரம்!

இன்று அதிகாலை 5.30 மணிக்கு மலேசியாவில் இருந்து திருச்சிக்கு 180 பயணிகளுடன் தனியார் விமானமொன்று புறப்பட்டு வந்தது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகள் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் விமானம் புறப்பட்ட 1 மணி நேரத்தில் மலேசியாவை சேர்ந்த சென்னையா(65) என்பவர் தன்னால் மூச்சு விட முடியவில்லை என்று கூறினார். இதையடுத்து அவருக்கு விமானத்திலேயே முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இதுகுறித்து திருச்சி விமான நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டு, மருத்துவர் குழு ஒன்று ஏர்போர்ட்டில் தயாராக இருந்தது.

எனினும் நடுவானிலேயே சென்னையா உயிரிழந்து விட்டார். இதனால் சக பயணிகள் அச்சத்தில் பயந்து நடுங்க, விமான பணிப்பெண்கள் அவர்களை ஆறுதல் வார்த்தைகள் கூறி சமாதானம் செய்தனர். தொடர்ந்து திருச்சியில் விமானம் இறங்கியதும், விமானத்தில் பயணித்த அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் முடிந்த பின் அனுப்பி வைக்கப்பட்டனர்.

சென்னையா உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து இதுகுறித்து அவரது உறவினர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தாலும் கூட அவருக்கு கொரோனா இருந்ததா? என்பதை கண்டறிய மருத்துவர்கள் மருத்துவர்கள்  அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர்.