'ஐயோ'... 'அவ ஒரு சூனியக்காரி'... 'ஊரே சேர்ந்து செய்த கொடுமை'... பாட்டிக்கு அடித்த ஜாக்பாட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சூனியக்காரி என ஊரே சேர்ந்து ஒதுக்கி வைத்த மூதாட்டி தற்போது கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.

'ஐயோ'... 'அவ ஒரு சூனியக்காரி'... 'ஊரே சேர்ந்து செய்த கொடுமை'... பாட்டிக்கு அடித்த ஜாக்பாட்!

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த 63 வயது மூதாட்டி குமாரி நாயக். இவரை பாலிடாக்டைலிசம் என்ற வித்தியாசமான நோய் தாக்கியதில், 19 கால் விரல்கள் மற்றும் 12 கை விரல்கள் அவரது உடலில் முளைத்தன. இதனால் அவரை பார்த்து பயந்து போன கிராம மக்கள், அவரை சூனியக்காரி என தவறாக புரிந்து கொண்டு ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர்.

இந்நிலையில் ஊரே தன்னை ஒதுக்கியதால் தனிமையின் கொடுமையில் மூதாட்டி குமாரி நாயக் வாழ்ந்து வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் மூதாட்டியை கின்னஸ் சாதனை புத்தகம் தற்போது அங்கீகரித்துள்ளது. ஏற்கனவே 14 கால் விரல்கள் மற்றும் 14 கை விரல்கள் கொண்ட குஜராத்தின் தேவேந்திர சுதர் கின்னஸ் சாதனையை குமாரி முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கின்னஸ் சாதனை புத்தகத்தால் தற்போது வெளி உலகத்திற்கு தெரிய வந்த மூதாட்டி குமாரி நாயக்கை சந்தித்த அரசு அதிகாரிகள், அவருக்கு முறையான சிகிச்சை மற்றும் உதவி தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்கள். இவ்வளவு நாள் எந்த ஊர் அந்த மூதாட்டியை ஒதுக்கி வைத்ததோ அவர்களே தற்போது மூதாட்டியை வந்து பார்த்து அவருக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள்.

KUMARI NAYAK, ODISHA, GUINNESS BOOK OF WORLD RECORDS, POLYDACTYLISM, 19 TOES