"கோர்ட்டுக்கு வரலனா உங்களுக்கு தூக்கமே வராதா?" கணவன் மனைவி இடையேயான வழக்குகள்.. கடுப்பான நீதிபதி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகணவன் மனைவி இடையே 60 வழக்குகள் பதியப்பட்டதை அடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருக்கும் கருத்துகள் குறித்து தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஒரே நேரத்துல 9 மனைவிகளுடன் வசித்த ரெமோ.. திடீர்னு அந்நியனா மாறிய ஒரு மனைவி..
60 வழக்குகள்
திருமணமாகி 41 வருடமான நிலையில் ஒரு தம்பதி ஓயாமல் தங்களுக்குள் தகராறு ஏற்பட்டதால் உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கின்றனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இருதரப்பையும் விசாரித்த நீதிபதி ஆச்சர்யம் அடைந்து உள்ளார்.
60 வழக்குகள்
30 ஆண்டுகாலம் ஒன்றாக வாழ்ந்து வந்த தம்பதி தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து பெற்றிருக்கிறது. இருப்பினும் ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைக்க, விஷயம் நீதிமன்றத்திற்கு வந்திருக்கிறது. ஒரு முறை இரண்டு முறை அல்ல. இந்த தம்பதி இடையே மொத்தம் 60 வழக்குகள் இதுவரையில் பதியப்பட்டுள்ளன.
தூக்கமே வராதா?
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரமணா, நீதிபதிகள் கிருஷ்ணா முராரி மற்றும் ஹிமா கோஹ்லி ஆகிய அமர்வு சுவாரஸ்ய கருத்துக்களை தெரிவித்திருக்கிறது. நீதிபதி ரமணா இந்த வழக்கில் பேசும்போது," சிலருக்கு சண்டைபோட பிடித்துவிடுகிறது. அவர்களுக்கு தினந்தோறும் நீதிமன்றத்திற்கு வர வேண்டும். இல்லையென்றால் தூக்கம் வராது" என கூறினார்.
மேலும், "வழக்கறிஞர்களின் புத்திசாலித்தனம் கவனிக்கப்பட வேண்டும்" எனவும் நீதிபதி தெரிவித்தார். இந்த வழக்கில் தீர்வு காண விருப்பமா? என பெண்ணிடம் நீதிபதிகள் கேட்டிருக்கின்றனர். அப்போது அந்தப் பெண் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாகவும், ஆனால் உயர் நீதிமன்றத்தின் விசாரணைக்கு தடை விதிக்கக் கூடாது எனவும் கூறியிருக்கிறார்.
வாய்ப்பில்லை
பெண் தரப்பு வழக்கறிஞர் வைத்த கோரிக்கையை சாந்தியமில்லாதது எனக்கூறி நீதிபதிகள் நிராகரித்தனர். மேலும், "நீங்கள் சண்டையிடுவதில் மிகவும் ஆர்வமாக இருப்பதாகத் தெரிகிறது. உங்களால் ஒரே நேரத்தில் இரண்டு செயல்களையும் செய்ய முடியாது. தியானம் செய்யுங்கள்" என அந்தப் பெண்ணிடம் தெரிவித்துள்ளார் நீதிபதி.
மத்தியஸ்தம் செய்ய தரப்பினரை பரிந்துரைத்த நீதிபதிகள், "மத்தியஸ்தம் என்பது காலவரையறையான செயல்முறை என்பதால், இதற்கிடையில் நிலுவையில் உள்ள மற்ற வழக்குகளைத் தொடர அனுமதிக்க முடியாது" எனவும் தெளிவுபடுத்தினர்.
முக்கியமான மேட்ச்ல மாரடோனா போட்ருந்த டிஷர்ட் ஏலம்..ஆரம்ப விலையே இவ்வளவு கோடியா?
மற்ற செய்திகள்