வயசு 6 தான்.. ஆனா எவரெஸ்ட் பயணத்தில் சாதனை படைத்த சிறுவன்.. அசந்துபோன அதிகாரிகள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆறு வயதான இந்திய வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் சிறுவன் ஒருவர் எவெரெஸ்ட் அடிவாரம் வரையில் பயணம் மேற்கொண்டு சாதனை படைத்திருக்கிறார்.

வயசு 6 தான்.. ஆனா எவரெஸ்ட் பயணத்தில் சாதனை படைத்த சிறுவன்.. அசந்துபோன அதிகாரிகள்..!

Also Read | தனியாக வாழ்ந்துவந்த பெண் சடலமாக மீட்பு.. ஆரம்பத்துல இருந்தே போலீசுக்கு உறுத்தலாக இருந்த விஷயம்.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..!

சாதனை படைக்க வயது தடை இல்லை என பலரும் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். இதனை மெய்ப்பிக்கும் வகையில் பல இளம் சாதனையாளர்களையும் நாம் சந்தித்திருப்போம். அந்த பட்டியலில் தற்போது இணைந்திருக்கிறார் ஓம் மதன் கர்க் எனும் ஆறு வயது சிறுவன். சிங்கப்பூரில் வசித்துவரும் சிறுவன் கர்க், இமயமலையில் ஏறவேண்டும் என சிறுவயதில் இருந்தே ஆர்வம் கொண்டிருந்திருக்கிறார். இதற்காக சிறுவயதில் இருந்தே மலையேற்றங்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார் இவர்.

தனது பெற்றோர் மயூர் கர்க் மற்றும் காயத்ரி மகேந்திரன் உடன் கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி எவெரெஸ்ட் அடிவாரம் நோக்கிய தனது பயணத்தை துவங்கியிருக்கிறார் கர்க். நேபாளத்தில் 5364 மீட்டர் உயரத்தில் இருக்கும் தெற்கு முகாமுக்கு 54 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்றிருக்கிறார் கர்க். இதன்மூலம், எவெரெஸ்ட் அடிவாரத்துக்கு சென்ற மிக இளம் வயதுகொண்ட சிங்கப்பூரை சேர்ந்தவர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் கர்க். மேலும், இதற்காக சிங்கப்பூர் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்-ல் கர்க்கின் பெயர் இடம்பெற்றுள்ளது.

6 Year old indian origin boy reaches Everest Base Camp

கர்க்கின் தந்தை மயூர் பிசினஸ் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். தொழில்ரீதியாக அவர் பல நாடுகளுக்கு பயணம் செய்வதால் கர்க் சிறுவயதிலேயே லாவோஸ், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு சென்று அங்குள்ள மலைகளில் ஏறியிருக்கிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு இமயமலை அடிவாரத்திற்கு சென்ற மயூர் தனது குடும்பத்தினரை அங்கே அழைத்துச் செல்லவேண்டும் என முடிவெடுத்திருக்கிறார். மேலும், இதற்காக பிரத்யேக பயிற்சிகளிலும் குடும்பத்துடன் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.

6 Year old indian origin boy reaches Everest Base Camp

கடந்த ஆறுமாத காலமாக உடல் மற்றும் மன ரீதியான பயிற்சிகளை மேற்கொண்டு வந்ததாகவும் மயூர் தெரிவித்திருக்கிறார். இந்த சாகச பயண அனுபவங்களை தங்களது யூடியூப் பக்கத்திலும் இந்த குடும்பத்தினர் பதிவிட்டிருக்கின்றனர். 6 வயதில் எவெரெஸ்ட் அடிவாரம் வரை பயணித்து சாதனை படைத்த சிறுவன் ஓம் கர்க்கை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Also Read | கையை பதம்பார்த்த பந்து.. பீல்டிங்கின்போது ஏற்பட்ட காயம்.. மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட ரோஹித்.. வீடியோ..!

INDIAN ORIGIN BOY, REACHES, EVEREST BASE CAMP

மற்ற செய்திகள்