ஒரு பைக்-ல இத்தனை பேரா..வைரலான வீடியோ.. போலீஸ் போட்ட பொளேர் கமெண்ட்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே பைக்கில் 6 பேர் சென்ற வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஒரு பைக்-ல இத்தனை பேரா..வைரலான வீடியோ.. போலீஸ் போட்ட பொளேர் கமெண்ட்..!

Also Read | 30 நிமிஷமா படகையே நடுங்க வச்ச ராட்சச மீன்.. போரடிக்குதுன்னு கடலுக்கு போனவர்களுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்.. ஒரே நாள்ல மாறிய வாழ்க்கை..!

பைக் பயணம்

இந்தியா போன்ற மக்கள் தொகை அடர்த்தி அதிகம் கொண்ட நாடுகளில் போக்குவரத்தின் தேவையும் மிக அதிகமாகவே இருக்கிறது. இதனால் மக்கள் தங்களது சுய தேவைகளுக்காக இருசக்கர மற்றும் கார்களை பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில், சாலை விபத்துகளை தவிர்க்க வாகன ஓட்டிகளுக்கு பல விதிமுறைகளை அரசு வகுத்தாலும் சிலர் அவற்றை சரியாக பின்பற்றுவதில்லை.

குறிப்பாக தலைக்கவசம் அணிதல், ஒரு பைக்கில் இரண்டு பேர் மட்டுமே செல்ல வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் சிலர் ஆபத்தான வகையில் வாகனங்களை இயக்குகிறார்கள். இதனால் சாலையில் பயணிக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது.

6 people seen riding on a scooter video goes viral

வைரல் வீடியோ

அந்த வகையில், மஹாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் உள்ள அந்தேரி பகுதியில் இருசக்கர வாகனம் ஒன்றில் 6 பேர் பயணிக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்தேரியின் ஸ்டார் பஸார் பகுதி அருகே உள்ள சிக்னலில் தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த வீடியோவில் ஒரே பைக்கில் 5 பேர் அமர்ந்திருக்க, ஒருவர் கடைசியாக இருப்பவரின் தோளின் மீது உட்கார்ந்திருக்கிறார். இதனை ராமன்தீப் சிங் ஹோரா என்பவர் வீடியோவாக எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

போலீஸ் போட்ட கமெண்ட்

 

மும்பையின் முக்கியமான பகுதியான ஸ்டார் பஸாரில் இப்படி ஒரே பைக்கில் 6 பேர் சென்ற வீடியோவை பகிர்ந்ததுடன் அதில் மும்பை போக்குவரத்து காவல்துறையையும் குறிப்பிட்டிருக்கிறார். அதற்கு "இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி டிஎன் நகர் போக்குவரத்து பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என மும்பை காவல்துறை கமெண்ட் போட்டுள்ளது.

மேலும், ஜோசப் சன்டிமானோ என்பவரும் இந்தப் பதிவில் ," இப்பகுதியில் இரவு 9 மணிக்கு மேலே, இளைஞர்கள் அதிவேகமாக வாகனங்களை இயக்கி பொதுமக்களை அச்சமூட்டுகிறார்கள். இவர்கள் சட்டத்தை மதிப்பதில்லை. தலைக்கவசம் அணியாமல் ஒரு பைக்கில் 3 அல்லது 4 பேர் வரையில் பயணிக்கிறார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

6 people seen riding on a scooter video goes viral

ஒரே பைக்கில் 6 பேர் செல்லும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானதை தொடர்ந்து, போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருப்பது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Also Read | தன்னுடைய குருவின் இறுதி ஊர்வலத்துல கலந்துக்கிட்ட கிம் ஜாங் உன்..வட கொரியாவின் சூப்பர் ஹீரோவாக கருதப்படும் ஹியோன் சோல் ஹே.. யாருப்பா இவரு?

Nenjuku Needhi Home
PEOPLES RIDING ON SCOOTER, POLICE, மஹாராஷ்டிரா

மற்ற செய்திகள்