"6 மாசத்துக்கா? எப்படி தாக்குப் பிடிக்குறது?".. 'பிரபல' இந்திய 'நிறுவனத்தின்' திடீர் முடிவால் 'திக்கு தெரியாமல்' நிற்கும் 'ஊழியர்கள்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, ஊழியர்களுக்கு 6 மாத சம்பளத்தை குறைக்க திட்டமிட்டுள்ளதாக டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

"6 மாசத்துக்கா? எப்படி தாக்குப் பிடிக்குறது?".. 'பிரபல' இந்திய 'நிறுவனத்தின்' திடீர் முடிவால் 'திக்கு தெரியாமல்' நிற்கும் 'ஊழியர்கள்'!

எனினும் கீழ்மட்ட பணியாளர்களின் சம்பளம் குறைக்கப்பட மாட்டாது என்றும், அதேசமயம் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் நிலையில் இருப்பவர்களுக்கு 5 சதவீதமும் மூத்த அதிகாரிகளுக்கு 15  முதல் 20 சதவீதம் வரையிலும், ஊதிய குறைப்பு இருக்கும் என்றும், மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்திற்கு இந்த நடவடிக்கை நடைமுறையில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை அடுத்து, ஒசூரில் உள்ள டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவன உற்பத்தி ஆலை மார்ச் மாத தொடக்கத்தில் மூடப்பட்டது.  எனினும் அந்த மாதத்தில் மட்டும் இதன் விற்பனை விகிதம் 62 சதவீத சரிவை சந்தித்தது. இதேபோல்,சென்ற மாதம் இந்த நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை விகிதம் பூச்சியத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்