'இந்த துறையில் மட்டும் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு'... 'அதுவும் இந்தாண்டு இறுதிக்குள்'... 'வெளியாகியுள்ள மகிழ்ச்சி தரும் செய்தி!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா பாதிப்பு காரணமாக பலரும் வேலையிழந்துவரும் நிலையில் மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக மிகப்பெரும் வேலையிழப்புகளும், பொருளாதார வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச மற்றும் உள்நாட்டை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பிஎல்ஐ திட்டத்தின்கீழ் இந்தியாவில் உற்பத்தியை பெருக்க முடிவு செய்துள்ளன. இதையடுத்து இந்த துறையில் டிசம்பர் மாத இறுதிக்குள் 50,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என கூறப்பட்டுள்ளது.
பிஎல்ஐ திட்டத்தின்படி உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் வகையில் மத்திய அரசு மானியம் வழங்குவதற்கான அறிவிப்பை ஏப்ரல் 1ஆம் தேதி வெளியிட்ட நிலையில், பாக்ஸ்கான், விஸ்ட்ரான், சாம்சங், டிக்சான் மற்றும் லாவா போன்ற ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் இந்தியாவில் புதிய தொழிற்சாலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து எதிர்காலத்தில் உலக தரத்திலான எலெக்ட்ரானிக் பொருட்கள் இந்தியாவிலேயே உருவாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்