'நாங்க 5 பேர்.. எங்களுக்கு பயம்னா என்னனு தெரியாது'.. பாம்புகளுடன் கர்பா டான்ஸ் ஆடிய இளம் பெண்கள் கைது!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுஜராத் மாநிலத்தில் கர்பா டான்ஸ் என்று சொல்லக்கூடிய நவராத்திரி தின சிறப்பு நிகழ்ச்சி நடந்தபோது இந்த நிகழ்ச்சியில் பாம்புகளுடன் சேர்ந்து ஆடியதாக பெண்கள் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலத்தின் ஜூனாகத் பகுதியில் நவராத்திரியை முன்னிட்டு கடந்த 6-ம் தேதியில் இருந்தே சிறப்பு கொண்டாட நடந்த நிகழ்ச்சிகள் தொடங்கிவிட்டன. இவற்றுள் கர்பா நடன நிகழ்ச்சி என்று சொல்லக்கூடிய மிகவும் புகழ்பெற்ற பிரபலமான நடன நிகழ்ச்சியைக் காண மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு இருந்தனர்.
இவர்களுக்கு மத்தியில் இளம்பெண்கள் சிலர் தங்கள் கைகளில் ராஜநாகம் உள்ளிட்ட அரிய, கொடிய பாம்புகளை பிடித்துக்கொண்டு நடனம் ஆடியதாக வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வலம் வந்து வைரலாகி மிகப் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளன.
‘பாம்பு என்றால் படையே நடுங்கும்’ என்பன போன்ற பழமொழிகளுக்கு மாறாக, இந்தப் பெண்கள் பயமறியாது, துணிச்சலோடு பாம்புகளை தம் கைகளில் பிடித்துக்கொண்டு நடனம் ஆடிய சம்பவம் என்னதான் வியப்பூட்டியதாக இருந்தாலும், விலங்குகள் நல ஆர்வலர்கள் பலரும் இது போன்று பாம்புகளை நடன நிகழ்ச்சிகளில் பெண்கள் பயன்படுத்தியது தவறு என்று நேரடியாகவே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் இவ்வாறு பாம்புகளைக் கொண்டு இந்த பெண்கள் நடன நிகழ்ச்சி ஆடியதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வனத்துறைக்கு சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இதுபற்றி விசாரணை செய்த வனத்துறை அதிகாரிகள் 12 வயது சிறுமி உட்பட 5 பேர் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாம்புகளை நிகழ்ச்சிக்காக பயன்படுத்தியது குற்றமென்று வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். எனினும் இந்த வழக்கில் சிறுமி உட்பட 3 பேருக்கு நீதிமன்றம் தற்காலிகமாக ஜாமீன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sunil Berwal, Dy Conservator of Forest (Wildlife), Junagarh: Case registered against 5 persons in connection with a viral video in which young girls were seen performing Garba holding cobras at an event on 6 Oct.5 accused, including a 12-yr-old girl, produced in court. #Gujarat pic.twitter.com/kk3vUNNN4O
— ANI (@ANI) October 12, 2019