‘முகத்தைக் காட்டாம டிமிக்கி கொடுத்துவந்த பெண்’.. ‘கல்யாணம் வரை சென்ற வாட்ஸ் ஆப் காதல்’.. கடைசி நேரத்தில் மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ். இவர் ஒரு வாட்ஸ் ஆப் குழுவில் கோட்டயத்தைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க ராஜிமோல் என்கிற இளம் பெண்ணுடன் சாட் செய்யத் தொடங்கினார். குரூப் சாட்டில் பேசத் தொடங்கிய இருவரும் நாளடைவில் தனிப்பட்ட முறையில் பேசத் தொடங்கினர்.

‘முகத்தைக் காட்டாம டிமிக்கி கொடுத்துவந்த பெண்’.. ‘கல்யாணம் வரை சென்ற வாட்ஸ் ஆப் காதல்’.. கடைசி நேரத்தில் மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இவர்களின் நட்பு காதலாக மாறியது. விக்னேஷுடன் தன்னுடன் சாட் செய்த ராஜிமோலின் முகத்தை வாட்ஸ் ஆப் புரோஃபைலில் மட்டுமே பார்த்துள்ளார். எனினும் இருவரும் திருமணம் செய்துகொள்ளவே முடிவெடுத்தனர். ஆனாலும் இருவரும் நேரில் சந்தித்துக் கொள்ளவில்லை. தான் தந்தையை இழந்துவிட்டதாகவும், தாய் மட்டுமே இருப்பதாகவும் ராஜிமோலின் விக்னேஷிடம் குறிப்பிட்டிருந்துள்ளார்.

அப்பெண்ணோ, ஜனவரியில் தன்னை பெண் பார்க்க வரும்போது நேரில் சந்திக்கலாம் என்று கூற, அந்த மாதம் வந்தபோது உறவினர் இறப்பைக் காரணம் காட்டி ராஜிமோல், இந்த சந்திப்பை தள்ளி போட்டார்.  அதன் பிறகு ஒரு வழியாக ஒரு அந்த ராஜிமோலின் தாய் மற்றும் உறவினர் என 2 பேர் வந்து விக்னேஷின் குடும்பத்தாரை பொது இடத்தில் சந்தித்து திருமணத்தை பிப்வரி 16-ஆம் தேதி வைத்துக்கொள்வதாய் பேசினர். அதன் பிறகும் கல்யாண பெண்ணை நேரில் பார்க்க விக்னேஷின் வீட்டாருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இன்னொரு பக்கம் விக்னேஷின் வீட்டில், தடபுடலாக 3 லட்ச ரூபாய் செலவில் வீடு சீரமைப்பு, தங்கள் நிலத்திலேயே மண்டப செட்-அப் என நடந்துவந்தன. கடைசியில் திருமண ஆடைகளை எடுக்க வேண்டும் என்பதற்காக ராஜிமோலை விக்னேஷ் அழைத்தபோதும், ராஜிமோல் வரமறுத்ததை அடுத்து அங்கு நேரில் சென்ற விக்னேஷ்க்கு தூக்கிவாரி போட்டது.

ஆம், அவரிடம் சாட் செய்தது 20 வயது இளம் பெண் அல்ல. 43 வயது ராஜிமோல் என்பதும், ராஜிமோலின் தாய் என்று சொல்லி, விக்னேஷின் குடும்பத்தாரை வந்து பார்த்துவிட்டு சென்றது வேறு யாரும் அல்ல, அவர்தான் ராஜிமோல் என்பதும், ராஜிமோல் அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணின் புகைப்படத்தையே தன் புரொபைல் போட்டோவாக வாட்ஸ் ஆப்பில் வைத்திருந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து விக்னேஷ் அளித்த புகாரின் பேரில் முதலில் ராஜிமோல் கைது செய்யப்பட்டு, ஆனால் ராஜிமோல் விக்னேஷிடம் இருந்து பணம் எதுவும் பறிக்கவில்லை என்பதால் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

KERALA, WHATSAPP, MARRIAGE