'ஜொமாட்டோ இதெல்லாம் டெலிவர் பண்வீங்களா ஜொமாட்டோ'.. 4 வயது சிறுவனை நெகிழ வைத்த ஜொமாட்டோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சமீப காலமாகவே ஜொமாட்டோ, சமூக வாடிக்கையாளர்களுடனான சுமுகமான உறவினால் புகழடைந்து வருகிறது.

'ஜொமாட்டோ இதெல்லாம் டெலிவர் பண்வீங்களா ஜொமாட்டோ'.. 4 வயது சிறுவனை நெகிழ வைத்த ஜொமாட்டோ!

முன்னதாக அசைவம் சாப்பிடக் கூடிய ஒருவர், தனக்கான உணவைக் கொண்டுவரவேண்டாம் என்று சொன்ன கஸ்டமரிடம்,  ‘உணவுக்கு மதம் இல்லை’ என்று கூறி இளைஞர்கள் மற்றும் சமூகப் பிரிவுகளை விரும்பாத பலரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த சூழ்நிலையில், மும்பையைச் சேர்ந்த தந்தை ஒருவர் தன் 4 வயது மகன், ஜொமாட்டோ மூலம், என்ன வேண்டுமானாலும் ஆர்டர் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பதாக பதிவிட்டுருந்தார். ஆனால் சிறுவனோ, விளையாடக் கூடிய டாய்ஸ் போன்ற பொருட்கள் எல்லாம் கொண்டுவந்து தருமாறு எழுதி, ஜொமாட்டோவை டேக் செய்கிறான்.

உடனே சிறுவனை மகிழ்விக்கும் விதமாக டாய்ஸ் உள்ளிட்ட பொருட்களை ஜொமாட்டோ அனுப்பி வைத்துள்ளது. அதனை புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் சிறுவனின் தந்தை பகிர்ந்துள்ளார்.

MUMBAI, ZOMATO, VIRAL, TOYS, DELIVER, ONLINE