'சதம் அடித்த பெட்ரோல் விலை'... 'இந்த 4 மாநிலங்களில் மட்டும் பெட்ரோல் மீதான வரி குறைப்பு'... நிம்மதி பெருமூச்சு விட்ட மக்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சில மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தொட்ட நிலையில், 4 மாநிலங்கள் பெட்ரோல் மீதான வரியைக் குறைத்துள்ளது.

'சதம் அடித்த பெட்ரோல் விலை'... 'இந்த 4 மாநிலங்களில் மட்டும் பெட்ரோல் மீதான வரி குறைப்பு'... நிம்மதி பெருமூச்சு விட்ட மக்கள்!

பெட்ரோல்- டீசலின் அடக்கவில்லை குறைவாகவே இருந்த போதிலும் மத்திய அரசும், மாநில அரசுகளும் அதிகளவிலான வரி விகிதத்தை விதித்து இருப்பதால், இவற்றின் விலை மிக அதிகமாக இருக்கிறது. மற்றொரு புறம் எண்ணை நிறுவனங்கள் கச்சா எண்ணை விலை உயர்வைக் காரணம் காட்டி தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. இதனால் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 92 ரூபாயையும், டீசல் விலை 85 ரூபாயையும் தாண்டி விற்று வருகிறது.

அதே நேரத்தில் சில மாநிலங்களில் உள்ளூர் வரி அதிகமாக இருப்பதால் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தொட்டது. இது நடுத்தர மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கிடையே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் வகையில் சில மாநிலங்கள் தங்கள் மாநில வரியைக் குறைத்து வருகின்றன. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் அதன் மாநிலத்தின் வாட் வரியை 38 சதவீதத்திலிருந்து 36 சதவீதமாகக் குறைத்துள்ளது.

அசாம் மாநிலத்தில் கொரோனாவுக்காக கூடுதல் வரி விதிக்கப்பட்டு இருந்தது. அதை அந்த மாநில அரசு அதில் 5 ரூபாயைக் குறைத்துள்ளது. மேற்கு வங்காள அரசு பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 1 ரூபாய் வரியைக் குறைத்து இருக்கிறது.

மேகாலயா மாநிலத்தில் மிக அதிகபட்சமாக வரி குறைப்பு செய்துள்ளனர். அந்த மாநிலத்தில் பெட்ரோலுக்கு விதிக்கப்பட்ட 31.62 சதவீத வரியை 20 சதவீதமாகவும், டீசல் விதிக்கப்பட்ட 22.95 சதவீத வரியை 12 சதவீதமாகவும் குறைத்துள்ளனர். இதனால் அங்கு பெட்ரோல் ரூ.7.40-ம், டீசலுக்கு ரூ.7.10ம் விலை குறைவு ஏற்பட்டு இருக்கிறது.

மற்ற செய்திகள்