'தயவுசெஞ்சு இத கண்டிப்பா செய்யுங்க'... 'இல்ல 3-வது அலை தாக்கும்'... இந்தியாவுக்கு விஞ்ஞானி எச்சரிக்கை!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியா கொரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த பெரும் போராட்டத்தை நடத்தி வருகிறது.

'தயவுசெஞ்சு இத கண்டிப்பா செய்யுங்க'... 'இல்ல 3-வது அலை தாக்கும்'... இந்தியாவுக்கு விஞ்ஞானி எச்சரிக்கை!

இந்தியாவில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை கோரத்தாண்டவத்தை நடத்தி வருகிறது. தினம் தினம் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியா, கொரோனாவின் முதல் அலையை ஓரளவிற்குச் சமாளித்த நிலையில், இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்துவதில் நீண்டதொரு போராட்டத்தை நடத்துகிற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனாவின் 3-வது அலை குறித்த எச்சரிக்கை சமிக்ஞைகளும் வந்தவண்ணமாக உள்ளன. இதுகுறித்து வித்யாசாகர் (சூத்ரா மாதிரி விஞ்ஞானி) கூறும்போது,  ''நோய் எதிர்ப்பு பொருள் குறைகிறபோது, நோய் எதிர்ப்புச்சக்தியும் குறையும். இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராகத் தடுப்பூசிகளைப்போடுவது அதிகரிக்காவிட்டாலும், கொரோனா கால கட்டுப்பாடுகளை ஒழுங்காகப் பின்பற்றாவிட்டாலும் இன்னும் 6 முதல் 8 மாதங்களில் 3-வது அலை தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது.

3rd wave possible if vaccination not ramped up, COVID norms not follow

இருப்பினும் சூத்ரா மாதிரி 3-வது அலையைக் கணிக்கவில்லை. அது தொடர்பாகச் செயல்பட்டு வருகிறது. எங்கள் எதிர்கால கணிப்புக்காக எங்கள் மாதிரியில் நோய் எதிர்ப்புச்சக்தி மற்றும் தடுப்பூசி அம்சங்களையும் சேர்த்துக்கொண்டிருக்கிறோம்'' எனக் கூறியுள்ளார். இதற்கிடையே இந்தியாவின் மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனம் நடத்திய  சர்வேயில், 5 அல்லது 6 மாதங்களில் நோய் எதிர்ப்பு பொருள் குறைந்துவிடுவதால், ஒருவர் மீண்டும் கொரோனா தாக்குதலுக்கு ஆளாக வாய்ப்பு உள்ளது எனத் தெரிய வந்தது.

3rd wave possible if vaccination not ramped up, COVID norms not follow

இதற்கிடையே, '' 3-வது அலை தவிர்க்க முடியாது, அதற்குத் தயாராக வேண்டும் என முதன்மை அறிவியல் ஆலோசகர் கே.விஜயராகவன் கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதுடன், தடுப்பூசிகள் போடுவதை அதிகரிக்காவிட்டால் 3-வது அலையிலிருந்து தப்பிக்க முடியாது என அவர் எச்சரித்துள்ளார்.

மற்ற செய்திகள்