டீச்சர் அடிக்கிறாங்க என்னன்னு கேளுங்க.. போலீஸ் ஸ்டேஷனுக்கு தனியாக வந்த 3 ஆம் வகுப்பு Cute சிறுவன்..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

"ஸ்கூல்-ல கணக்கு டீச்சர் ரொம்ப அடிக்கிறாரு.. கம்பிளைன்ட் கொடுக்கணும்" இப்படித்தான் அந்தப் பையன் சொல்லியிருக்கிறான் காவல் நிலையத்தில். ஒரு காலத்தில் டீச்சர்களின் பிரம்பில் இருந்து தப்பிக்க படாதபாடு பட்ட 90s கிட்களை ஆச்சர்யத்தில் மூழ்கடித்திருக்கிறான் தெலுங்கானாவின் மஹபூபா நகர் மாவட்டத்தைச் சேர்ந்த அனில் என்னும் சிறுவன்.

டீச்சர் அடிக்கிறாங்க என்னன்னு கேளுங்க.. போலீஸ் ஸ்டேஷனுக்கு தனியாக வந்த 3 ஆம் வகுப்பு Cute சிறுவன்..

"நம்ம போர் விமானங்கள்ல சீனா கொடிய கட்டுங்க.. ரஷ்யா மேல குண்டு போடுங்க".. டொனால்டு ட்ரம்ப் சொன்ன விபரீத யோசனை..!

மஹபூபா நகர் மாவட்டத்தின் பையாராம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துவரும் அனில், நேற்று அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு வந்திருக்கிறான். முகக்கவசம் அணிந்து பவ்யமாக வந்த அனிலை கண்ட துணை ஆய்வாளர் ரமா தேவி அவனை அருகில் அழைத்து இருக்கிறார்.

டீச்சர் அடிக்கிறாங்க

அனிலை அருகில் அழைத்த எஸ்ஐ ராமா தேவி, "உனது பெயர் என்ன? எந்த பள்ளியில் படிக்கிறாய்? என்ன காரணத்திற்காக காவல் நிலையத்திற்கு வந்தாய்?" என கேட்டிருக்கிறார். இதற்கு குழந்தை மொழியில் பதிலளித்த அனில், பள்ளியில் சன்னி, வெங்கட் ஆகிய இரண்டு ஆசிரியர்கள் தம்மை அடிப்பதாகவும் அவர்கள் மீது புகார் அளிக்க வந்து இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறான்.

3rd standard student asks police to arrest his teacher

அனில் கூறியவற்றை கவனமாக கேட்ட காவல்துறை அதிகாரியான ரமா தேவி, அனிலுடன் அந்தப் பள்ளிக்கு சென்றுள்ளார். காவல்துறை அதிகாரியுடன் அனில் வந்ததால் பள்ளி வளாகமே பரபரப்பாகி இருக்கிறது. அப்போது "யார் அடித்தது உன்னை?" என எஸ்ஐ கேட்க, அனில் அங்கிருந்த இரு ஆசிரியர்களை கைகாட்டி இருக்கிறான்.

அறிவுரை

இனி மாணவர்களை துன்புறுத்த கூடாது என ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிய ரமா தேவி, கம்ப்ளைண்ட் கொடுக்க வந்த அனிலிடமும்  ஒழுங்காக படிக்குமாறு அறிவுரைகளை வழங்கி இருக்கிறார். ஆசிரியர்கள் அடிப்பதாக கூறி காவல் நிலையத்திற்கு தனியாக சென்று புகார் அளிக்க வந்திருப்பதாக மழலை மொழியில் அனில் பேசும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ந்த ரூபாய் மதிப்பு.. உச்சத்தில் தங்கம் விலை..!

STUDENT, POLICE, ARREST, PHYSICAL PUNISHMENT, TEACHER, மஹபூபா நகர், டீச்சர்

மற்ற செய்திகள்