'அவர' வழியனுப்ப நாம எல்லாரும் கண்டிப்பா போகணும்...! 'சாலையில் இறந்த ஆதரவற்ற மனிதர்...' - 3000-க்கு அதிகமான மக்கள் இறுதி அஞ்சலி...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்நாடகாவில் சாலையில் உயிரிழந்த ஆதாரவற்றவரின் இறுதி சடங்கிற்கு சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'அவர' வழியனுப்ப நாம எல்லாரும் கண்டிப்பா போகணும்...! 'சாலையில் இறந்த ஆதரவற்ற மனிதர்...' - 3000-க்கு அதிகமான மக்கள் இறுதி அஞ்சலி...!

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஹடகலி நகரத்தில் சாலையில் ஆதரவற்ற நிலையில் 45 வயதான பசவா என்பவர் வாழ்ந்து வந்துள்ளார்.

3000 peoples tribute to beggar died on the road in Karnataka

பல ஆண்டுகளாக ஹடகலி நகரில் இருந்து வரும் அவர் பொது மக்களிடம் ஒரு ரூபாய் மட்டுமே யாசகமாக வாங்கி வந்துள்ளார். அதற்கு மேல் கொடுத்தால் கூட மீதி சில்லறையை அவர்களிடமே கொடுத்து விடுவாராம்.

இந்நிலையில், பசவா சில நாட்களுக்கி முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் மரணம் அடைந்துள்ளார். இந்த செய்தியை கேட்ட அப்பகுதி மக்கள் பசவா அவர்களின் இறுதி சடங்கை நடத்தி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அவரின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கில் திரண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அப்பகுதி மக்கள் அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்க உள்ளோம் என உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

3000 PEOPLES, BEGGAR, ROAD, KARNATAKA

மற்ற செய்திகள்