தங்கத்தை இப்படி யாருமே கடத்தியிருக்க மாட்டாங்க..அதிகாரிகளுக்கு கிடைச்ச ரகசிய தகவல்.. திகைக்க வச்ச வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொல்கத்தா விமான நிலையத்தில் தனியார் விமானத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதைப்பொருள், வெளிநாட்டு கரன்சிகளுடன் இந்தியா வரும் நபர்களை இந்திய விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து கைது செய்துவருகின்றனர். பணத்திற்காக இளைஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக காவல்துறை அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், கொல்கத்தா மாநில விமான நிலையத்தில் வித்தியாசமான முறையில் கடத்தல் நடைபெற்றிருக்கிறது. இதனை அதிகாரிகள் கச்சிதமாக கைப்பற்றியுள்ளனர்.
தங்கம்
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா விமான நிலைத்துக்கு வந்த தனியார் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக விமான புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதனையடுத்து, மொத்த விமானத்தையும் அதிகாரிகள் பரிசோதனை செய்ய துவங்கினர்.
இதன் பலனாக அந்த விமானத்தின் 20 வது வரிசையில் இருந்த இருக்கையின் கீழ் பொருத்தப்பட்டிருந்த குழாய் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து அந்த குழாயை ஆய்வு செய்ததில் அதற்குள் கருப்பு நிற டேப்பில் சுற்றப்பட்ட தங்க கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதனுள் 12 தங்க துண்டுகள் இருந்ததாகவும், அதன் எடை 600 கிராம் எனவும் கொல்கத்தா சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விசாரணை
கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு 30,87,000 ரூபாய் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வீடியோவை கொல்கத்தா சுங்கத்துறை அதிகாரிகள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
முன்னதாக ஜூலை 21ஆம் தேதி வாரணாசி லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில் 18.17 லட்சம் மதிப்புள்ள தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. 349.5 கிராம் எடை கொண்ட இது பயணி ஒருவரின் மூன்று டிராலி பைகளில் இருந்து மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
12 cut pcs of #foreign #goldbars (weighing 600gms approx & worth ₹30.87L) wrapped with black adhesive tapes kept concealed in Spicejet flight SG-743 were recovered & seized by #AIU Kolkata on 26.7.22 @cbic_india @PIBKolkata @DDBanglaNews pic.twitter.com/28Az4OQMCO
— Kolkata Customs (@kolkata_customs) July 26, 2022
மற்ற செய்திகள்