'ஹெட் ஆபீஸ்'ல இருந்து பேங்க் மேனேஜர் பேசுறேன் சார்'...'உங்க கார்டுல 16 நம்பர்'...இந்த குரல் நியாபகம் இருக்கா?
முகப்பு > செய்திகள் > இந்தியாசார் 'ஹெட் ஆபீஸ்'ல இருந்து பேங்க் மேனேஜர் பேசுறேன். உங்க கார்டுல இருக்குற 16 நம்பரை சொல்லுங்க'' இந்த குரலை கேட்காதவர்கள் தமிழகத்தில் மிகவும் குறைவு என்றே சொல்லலாம். தன்னை வங்கியின் அதிகாரி என்று அறிமுகப்படுத்தி கொண்டு பேசும் அந்த நபர், உங்களுடைய ஏடிஎம் பிளாக் ஆகிவிட்டதாக கூறி, அதனை புதுப்பிக்க வேண்டும் என்று கார்டு விவரங்களை கேட்பார். இதன் மூலம் விவரம் அறியாத பலர் பல்லாயிரக்கணக்கான பணத்தை இழந்திருக்கிறார்கள்.
இந்நிலையில் போலியான கால் சென்ட்டர் மூலம் பலரை ஏமாற்றி பணத்தை சுருட்டிய கும்பலை, டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். இந்த கும்பலில் மொத்தமாக 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களிடம் இருந்து 3 இணையதள பரிமாற்றும் கருவிகள், 35 செல்போன்கள், உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த கும்பல் கனடாவில் வாழும் இந்திய மக்களை குறிவைத்து கைவரிசை காட்டியிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.
அதே நேரத்தில் இந்த கும்பல் இந்தியாவின் வேறு மாநிலத்தில் எங்காவது இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளார்கள். கைது செய்யப்பட்டவர்கள் நடத்திய கால் சென்டரின் உள்ளே, முறையாக ஒரு நிறுவனம் எப்படி செயல்படுமோ அதுபோன்று அனைத்து உட்கட்டமைப்புகளை அந்த கும்பல் செய்துள்ளது. அதுகுறித்த வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.
Inside the fake call centre that Delhi Police busted. 30 people were arrested in connection with the case. Read herehttps://t.co/njKE4kct4A pic.twitter.com/270BSx2gVN
— DNA (@dna) November 17, 2019