'3 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்'.. 2 பெண் ஊழியர்களுக்கு வலைவீச்சு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தெலங்கானாவில் மழலையர் பள்ளியில் படிக்கும் 3 வயது சிறுமியை குரூரமான முறையில் பாலியல் சித்ரவதைக்குள்ளாக்கியுள்ள சம்பவம் பெருத்த அதிர்ச்சியைம்ஏற்படுத்தியுள்ளது.

'3 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்'.. 2 பெண் ஊழியர்களுக்கு வலைவீச்சு!

சிறுமிகள் வன்கொடுமைக்குள்ளாக்கப்படுவது நாடு முழுவதும் நிகழ்ந்துகொண்டிருப்பது பெருத்த சோகத்தையும் பலருக்கு பெருத்த கோபத்தையும் உருவாக்கிவரும் நிலையில், அவர்களின் பாலியல் சுதந்திரத்துக்கும் மனத்திடகாத்திரத்துக்குமான நம்பிக்கை அஸ்திவாரங்களே இல்லாத நிலையில், மீண்டும் பள்ளிச்சிறுமி ஒருவருக்கு நேர்ந்துள்ள விநோதமான கொடூரம் தெலங்கானாவை நடுங்க வைத்துள்ளது.

அதன்படி மழலையர் பள்ளியில் பயின்றுவந்த அந்த 3 வயது சிறுமியின் பெண்ணுறுப்புக்குள் கற்களை நுழைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அம்மழலைப் பள்ளியின் 2 பெண் ஊழியர்கள் மீது அக்குழந்தையின் தாயார் புகார் அளித்ததுதான் பரபரப்பை ஏற்படுத்தியது.

எனினும் இந்த புகாரை ஏற்ற போலீஸார் குழந்தையை முதற்கட்டமாக பரிசோதனை செய்ததில் பாலியல் ரீதியாக குழந்தை துன்புறுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்தனர். அதன் பிறகு விசாரிக்கத் தொடங்கியபோது, அந்தப் பெண்கள் இருவரும் மாயமாகியது தெரியவந்ததை அடுத்து அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

SEXUALABUSE, POCSO, TELANGANA