இந்த 3 ‘தடுப்பூசி’தான் நல்ல பலன் கொடுக்கும்.. மற்றவை சாதாரண ‘தண்ணீர்’ போலதான் இருக்கும்.. சீரம் சிஇஓ கருத்து..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா தடுப்பூசிகளில் மூன்று மட்டுமே நல்ல பலனை அளிக்கும் என்றும், எஞ்சியவை சாதாரண தண்ணீரை போல் மட்டுமே இருக்கும் என சீரம் இந்திய நிறுவன சிஇஓ பூனாவல்லா தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்கள் படாதபாடு படுத்தி வருகிறது. இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர், 85 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் உலக நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி வருகின்றன. தற்போது அதற்கான சோதனைகள் நடைபெற்று, அதில் ஒருசில தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டு வந்துள்ளது. அதேபோல் இந்தியாவில் இன்னும் சில நாட்களில் தடுப்பூசி மக்களுக்கு அளிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சீரம் (Serum) இந்திய நிறுவன சிஇஓ பூனாவல்லா NDTV ஊடகத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில், ‘சீரம் இந்தியா தயாரிக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைகழத்தின் கோவிஷீல்டுக்கு (Covishield) மத்திய அரசு அவசரகால பயன்பாட்டுக்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. இன்னும் 10 நாட்களுக்குள் 5 கோடி டோஸ்களும், ஒன்றரை மாதத்துக்குள் மேலும் 7 முதல் 8 கோடி டோஸ்கள் தயாராகும்’ என தெரிவித்துள்ளார்.
மேலும் ஃபைசர், மாடர்னாவின் தடுப்பூசி, கோவிஷீல்டு ஆகியவற்றின் செயல்திறன் மட்டுமே உலகில் நிரூப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மூன்றை தவிர மற்ற தடுப்பூசிகள் சாதாரண தண்ணீர் போன்றவை என்றும் கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்