"அந்த வாட்ஸ் ஆப் சாட்டிங்லாம் வெளில விட்ரட்டுமா?".. 'கல்லூரி' பெண்களை மிரட்டி 'பெண் உட்பட 3 பேர் கொண்ட கும்பல்' செய்த பரபரப்பு காரியம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஹரியானா மாநிலத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவிகளின் வாட்ஸ் ஆப் செயலிகளை ஹேக் செய்து பணம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். 

"அந்த வாட்ஸ் ஆப் சாட்டிங்லாம் வெளில விட்ரட்டுமா?".. 'கல்லூரி' பெண்களை மிரட்டி 'பெண் உட்பட 3 பேர் கொண்ட கும்பல்' செய்த பரபரப்பு காரியம்!

ஃபரிதாபாத், பல்வால், குருகிராம் மற்றும் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் பள்ளி கல்லூரி மாணவிகளின் வாட்ஸ்ஆப் செயலிகள் யார் மூலமோ ஹேக் செய்யப்பட்டு அவர்கள் மிரட்டப்படும் தகவல் போலீசாருக்கு கிடைத்ததன் அடிப்படையில் விரைந்து சென்று விசாரித்த போலீசார் இது குறித்து சில அதிர்ச்சி உண்மைகளை கண்டறிந்தனர்.

அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில் ஏர்டெல் நிறுவனத்தில் பணியாற்றிய சத்தார்கான் என்பவர் தன்னுடைய போலி ஆதாரங்களை பயன்படுத்தி மணிஷ் மற்றும் பூஜா உள்ளிட்டோருக்கு சிம் கார்டுகளை வழங்கி உள்ளது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் 100க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவிகளின் வாட்ஸ் ஆப் செயலியை இவர்கள் ஹேக் செய்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் அந்த பெண்களின் அந்தரங்க சாட்களை இணையதளங்களில் வெளியிட போவதாகவும் அந்த பெண்களிடம் கூறி மிரட்டி உள்ளனர். இதனால் பயந்துபோன அந்த மாணவிகள் ஏராளமாக இவர்களிடம் பணத்தை பறி கொடுத்ததாக தெரிகிறது. மாணவிகளை மிரட்டி பணம் பறிப்பதற்காக பூஜா உள்ளிட்ட மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்