"Card மேலே இருக்க நம்பர் சொல்லுங்கோ மேடம்".. 4 லட்சம் அபேஸ்.. பக்கவா பிளான் போட்டு.. கடைசில மண்டை மேல இருந்த கொண்டையை மறந்த கும்பல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிரா மாநிலத்தில் தனியார் வங்கி அதிகாரி போல நடித்து பெண்ணிடம் 4 லட்ச ரூபாயை சுருட்டிய கும்பலை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
Also Read | திடீர்னு உருவான துளை.. எல்லாம் முடிஞ்சதுன்னு நெனச்சப்போ அடுத்த வாரமே இப்படி ஆகிடுச்சே.. பதறிப்போன மக்கள்..!
போன்கால்
மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரத்தை சேர்ந்தவர் மான்யா தலால். 49 வயதான இவருக்கு சில தினங்களுக்கு முன்னர் ஒரு போன்கால் வந்திருக்கிறது. அப்போது, தனியார் வங்கியில் இருந்து பேசுவதாகவும் KYC அப்டேட் செய்ய வேண்டியிருப்பதாகவும் மர்ம நபர் சொல்லியிருக்கிறார். இதனை நம்பிய தலால், தனது டெபிட் கார்டு விபரங்கள், ஆன்லைன் பேங்கிங் பாஸ்வேர்டு ஆகியவற்றை பகிர்ந்திருக்கிறார். அதன் பிறகுதான் தலாலுக்கு விபரீதம் புரிந்திருக்கிறது. அடுத்த சில மணி நேரங்களில் அவருடைய வங்கி கணக்கில் இருந்து 4,64,186 ரூபாய் எடுக்கப்பட்டிருக்கிறது.
இதனால் அதிர்ந்துபோன அவர் மலபார் ஹில் பகுதியில் அமைந்துள்ள காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்திருக்கிறார். இதனை தொடர்ந்து தலால் புகார் குறித்து விசாரணை நடத்திவந்த காவல்துறையினர் சல்மான் கான் (28), இர்பான் கான் (21) மற்றும் ஒரு சிறுவனை கைது செய்திருக்கின்றனர்.
பெட்ரோல் பங்க்
இதுகுறித்து அந்த பகுதியின் DCP நிலோட்பால் பேசியபோது," குற்றம் சாட்டப்பட்டவர் புகார்தாரரிடம் KYC ஐப் புதுப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அவரது அனைத்து விவரங்களையும் எடுத்துக்கொண்டு, அவரது வங்கிக் கணக்குகள் மீதான கட்டுப்பாட்டைப் பெற்ற பிறகு அவரை ஏமாற்றிவிட்டார். அந்த வங்கி கணக்கினை தொடர்ந்து கண்காணித்துவந்தோம். அப்போது, அந்த கணக்கில் இருந்து ஒரு பெட்ரோல் பங்கில் பணம் செலுத்தப்பட்டது தெரியவந்தது. இதன்மூலம், இந்த திருட்டில் ஈடுபட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டனர்" என்றார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்த பெண்ணின் நெட் பேங்கிங் கணக்கின் கட்டுப்பாட்டைப் பெற்ற பிறகு விர்ச்சுவல் கார்டைப் பெற்றிருக்கின்றனர். பின்னர் அது டெல்லியில் உள்ள பெட்ரோல் பங்கில் பயன்படுத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். மேலும் குற்றவாளிகளிடம் இருந்து 5 செல்போன்கள் மற்றும் 6 ஏடிஎம் கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Also Read | "பணம் கொடுத்தாதான் Hospital-ல இடம்".. சாலையில் நடந்த பிரசவம்.. இந்தியாவை உலுக்கிய சம்பவம்..!
மற்ற செய்திகள்