கல்யாணத்துக்கு பொண்ணு தேடியும் கிடைக்கல.. போலீஸ் ஸ்டேஷனுக்கு போன இளைஞர்.. லெட்டரை பார்த்து ஆச்சர்யமான அதிகாரிகள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திர பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனக்கு மணப்பெண் கிடைக்கவில்லை எனவும் ஆகவே, போலீசார் தனக்கு உதவி செய்யவேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners
பொதுவாக திருமணங்களில் வரன் பார்ப்பது என்பது பெரும் உழைப்பை கோரும் செயலாகும். தம்முடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவேண்டும் என ஆண், பெண் இருபாலரும் எதிர்பார்ப்பது உண்டு. நவீன காலத்தில் இணையத்தின் வளர்ச்சிக்கு பிறகு வரன் தேடுவதற்கான வசதிகள் அதிகரித்துவிட்ட போதிலும் எல்லோராலும் அதனை பயன்படுத்த முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனக்கு எங்கு தேடியும் பெண் கிடைக்கவில்லை என்பதால் தனக்கு உதவி செய்யும்படி காவல்துறையில் மனு ஒன்றை அளித்திருக்கிறார்.
உத்திர பிரதேச மாநிலத்தின் முசாபர் நகர் அருகே உள்ள கடாலி பகுதியை சேர்ந்தவர் முகமது டேனிஷ். இவருக்கு தற்போது 20 வயதாகிறது. இவர் தனது 4 சகோதரர்களுடன் வசித்து வருகிறார். தனது தாயுடன் இணைந்து மளிகை கடை ஒன்றையும் டேனிஷ் நடத்திவருகிறார். இந்நிலையில், டேனிஷிற்கு திருமணம் செய்ய அவரது வீட்டினர் முடிவெடுத்திருக்கின்றனர். இதற்காக பல இடங்களில் டேனிஷிற்கு தகுந்தபடி பெண்பார்த்தும் எதுவும் அமையாததால் டேனிஷ் கவலையடைந்திருக்கிறார்.
இந்நிலையில், இவர் கடாலி காவல்நிலையத்திற்கு சென்று மனு ஒன்றையும் அளித்திருக்கிறார். அதில்,"நான் திருமணம் செய்ய முடிவெடுத்து பெண் தேடினேன். வளர்ச்சி குறைவு என்பதால் எனக்கான பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே காவல்துறையினர் எனக்கு உதவி செய்யவேண்டும்" என கோரிக்கை வைத்திருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners
இந்த மனுவை பெற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரி சஞ்சீவ் குமார் தலால் இதுபற்றி பேசுகையில்,"இது முற்றிலும் வித்தியாசமான கோரிக்கை. இதுகுறித்து அதிகாரிகளுடன் பேசி முடிவு எடுக்கப்படும்" எனக்கூறி இருக்கிறார். முன்னதாக சாம்லி மாவட்டத்தை சேர்ந்த கைராணா பகுதியை சேர்ந்த 27 வயது நிரம்பிய அசீம் மன்சூரி என்பவரும் தனக்கு வளர்ச்சி குறைவு என்பதால் யாருமே பெண்கொடுக்க முன்வரவில்லை எனவும் தனக்கு உதவும்படியும் காவல்துறை மற்றும் முன்னாள் உத்திர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
இதனை தொடர்ந்து அசீமுக்கு கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த சூழ்நிலையில் டேனிஷ் என்பவரும் இதேபோன்ற கோரிக்கையுடன் காவல்துறையினரிடம் மனு கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்