இந்தியாவில் 12 மணி நேரத்தில் 3 முறை நிலநடுக்கம்.. அதிர்ச்சியில் மக்கள்.. முழுவிபரம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்திராகண்ட் மாநிலத்தில் 12 மணி நேரத்தில் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது அந்த மாநில மக்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

இந்தியாவில் 12 மணி நேரத்தில் 3 முறை நிலநடுக்கம்.. அதிர்ச்சியில் மக்கள்.. முழுவிபரம்..!

                        Images are subject to © copyright to their respective owners.

துருக்கியில் துவங்கிய சோகம்

மத்திய கிழக்கு நாடான துருக்கியில் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் அண்டை நாடுகளான சிரியா உள்ளிட்ட நாடுகளில் பெரும் சேதம் ஏற்பட்டது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கையும் 40000 ஐ கடந்திருக்கிறது.

3 Earthquakes Felt In Uttarakhand Uttarkashi In 12 Hours

Images are subject to © copyright to their respective owners.

அடுத்தடுத்த அதிர்ச்சி

இதனையடுத்து நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அதிகாரிகள் உறுதி செய்தனர். இதனிடையே, ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் சீனாவில் ஒரே நாளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக அந்நாட்டை சேர்ந்த நிலநடுக்க ஆய்வுமையங்கள் தெரிவித்திருந்தன. இது ஒருபக்கம் இருக்க இந்தியாவின் விட கிழக்கு மாநிலங்கள் பலவற்றில் சமீப காலங்களில் அடுத்தடுத்து சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருந்தன.

3 நிலநடுக்கங்கள்

இந்த சூழ்நிலையில் உத்திராகண்ட் மாநிலத்தில் 12 மணி நேரத்தில் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது அம்மாநிலம் முழுவதும் உள்ள மக்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. பத்வாரி தொகுதியின் சிரோர் வனப்பகுதியில் நேற்று நள்ளிரவு 12.45 மணியளவில் முதல் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 2.5 ஆக இருந்தது. மூன்றாவது நிலநடுக்கம் காலை 10.10 மணியளவில் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 1.8 ஆக பதிவாகி இருந்தது. இத்துடன் கடந்த 2 மாதங்களில் மட்டும் உத்திராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்து உள்ளது.

3 Earthquakes Felt In Uttarakhand Uttarkashi In 12 Hours

Images are subject to © copyright to their respective owners.

முன்னதாக துருக்கி மற்றும் சிரியாவை தொடர்ந்து இந்தியாவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான டாக்டர். பூர்ணசந்திர ராவ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் உத்திராகண்ட் மாநிலத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருப்பது மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

UTTARAKHAND, EARTHQUAKE

மற்ற செய்திகள்