'கால்பந்த விளையாட யூஸ் பண்ணுவாங்கன்னு பார்த்தா...' 'சீட்ல தனியா கிடந்த கால்பந்து...' 'முன்கூட்டியே கெடச்ச அலெர்ட்...' - உச்சக்கட்ட பரபரப்பு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாதற்போது விமான நிலையங்களில் தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில் பரிசோதனை கெடுபிடிகளும் இறுக்கமாக்கப்பட்டுள்ளன. என்னதான் நடந்தாலும் நாங்கள் கடத்துவதை கடத்துவோம் என்ற நிலையில் கொள்ளை கும்பல் தாங்கள் வேலையை செய்துக்கொண்டு போலீசாரிடம் மாட்டி வருகிறது.
அதுபோல் தான் நேற்று பெங்களூருவில் இருக்கும் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் துபாயில் இருந்து பெங்களூரு வந்த விமானத்தில் தங்கக்கட்டிகள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, அந்த விமானத்தில் வந்த பயணிகளை போலீசார் சோதனைக்கு உட்படுத்தியதில் பயணிகளிடம் இருந்து தங்ககட்டிகள் எதுவும் சிக்கவில்லை. அதனைத்த தொடர்ந்து பயணிகள் வந்த விமானத்தை பரிசோதிதத்தில் ஒரு இருக்கையில் மட்டும் கால்பந்து கிடைத்துள்ளது.
அதனை பிரித்து பார்த்தத்தில் சுமார் 223 கிராம் எடை கொண்ட 2 தங்கக்கட்டிகள் இருந்துள்ளன. தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றின் மதிப்பு ரூ.11 லட்சத்து 30 ஆயிரம் எனவும் தெரிவித்துள்ளனர்.
விமான நிலையத்தில் சோதனை சோதனை நடத்துவது தெரிய வரவே தான் தங்ககட்டியை கடத்தி வந்தவர் அதை விமானத்தில் போட்டு விட்டு சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மற்ற செய்திகள்