ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தை சேர்ந்த கோபாபூர் கிராமத்தில் கடந்த 6 மாதங்களில் 3 பெண்கள் திடீரென மரணம் அடைந்தனர். 7 பேர் நோய்வாய்ப்பட்டு மரணம் அடைந்தனர்.இது அக்கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இதனால் தங்கள் கிராமத்துக்கு யாரோ பில்லி,சூனியம் வைத்து விட்டதாக அவர்கள் மக்கள் கருதினர்.
இதுதொடர்பாக தங்களது கிராமத்தில் வசிக்கும் 6 முதியவர்கள் மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர்களின் பற்களை பிடுங்க கிராம கூட்டம் நடத்தி முடிவு செய்தனர்.
முடிவின்படி நேற்று(செவ்வாய்க்கிழமை) 6 முதியவர்களையும்,அவர்களின் வீட்டுக்குள் சென்று அக்கிராமத்து பெண்கள் அடித்து,உதைத்து இழுத்து வந்தனர்.தொடர்ந்து கற்களால் அடித்தும்,இடுக்கி கொண்டும் அவர்கள் பற்களை துடிக்க,துடிக்க பிடுங்கினர்.இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அந்த கிராமத்துக்கு விரைந்து வந்து,6 முதியவர்களையும் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுதொடர்பாக 22 பெண்கள் உட்பட 29 பேரை கைது செய்த போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்செய்து சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.