’போடு ரகிட ரகிட!’.. '21 வயதில் மேயர்!'.. ‘கேரள அரசியல் கிரவுண்டில்’ இறங்கி அடிக்கும் ‘இளம் பெண்கள்’!’
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் பெண்கள் தொடர்ந்து அரசியலில் ஆர்வம் காட்டி வருவதை காண முடிகிறது. அதுவும் குறிப்பாக கேரளாவில் இளம் பெண்கள் துணிச்சலுடன் அரசியலுக்கு வந்து தங்களது சமூக அக்கறையை காண்பித்து வருவதை அனைத்து மாநிலங்களுமே உற்றுநோக்கி வருகின்றன.
அவ்வகையில் கேரளாவின் திருவனந்தபுரம் பெருநகர மாநகராட்சி மேயராக 21 வயது நிரம்பிய பெண் பதவியேற்க உள்ள சம்பவம் நெகிழ வைத்துள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பெருநகராட்சிக்கு உட்பட்ட முடவன்முகல் வார்டு கவுன்சிலராக ஆர்யா ராஜேந்திரன் என்பவர் பதவியேற்க உள்ளார். இவரைத்தான் புதிய மேயராக சிபிஎம் கட்சி அறிவித்துள்ளது. ஆல் செயிண்ட்ஸ் கல்லூரியை சேர்ந்த பிஎஸ்சி கணிதவியல் மாணவியான ஆர்யா எஸ்.எஃப்.ஐ மாநிலக்குழு உறுப்பினராக இருக்கிறார்.
மேலும் சிபிஎம் கேசவதேவ் சாலை கிளைக் குழுவின் உறுப்பினராகவும், பாலா ஜன சங்கத்தின் மாநில தலைவராகவும் இருந்து வரும் ஆர்யா தற்போது கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி கைப்பற்றியதை அடுத்து அந்தக் கட்சியால் புதிய மேயராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் 21 வயது நிரம்பிய இளம் மேயர் என்கிற பெருமையை தற்போது ஆர்யா ராஜேந்திரன் பெற்று பதவி ஏற்க இருக்கிறார்.
மற்ற செய்திகள்