'என் தங்கச்சியவா லவ் பண்ற?'... 'கத்தியால் குத்திய கும்பல்'... நடுரோட்டில் 'நெஞ்சை பதறவைத்த' சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகாதலித்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டதற்காக, புது மாப்பிள்ளையை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த இம்தியாஸ் - ஃபாத்திமா இருவரும் கடந்த 5 வருடங்களாகக் காதலித்து வந்தாகத் தெரிகிறது. இவர்களின் காதலை ஃபாத்திமாவின் குடும்பத்தினர் ஏற்கவில்லை. இதனால் இருவீட்டார் எதிர்ப்பை மீறி கடந்த 5 தினங்களுக்கு முன்னர் இந்த காதலர்கள் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், ஃபாத்திமா காணாமல் போனதாக கடந்த 5-ம் தேதி காவல்நிலையத்தில், அவரது பெற்றோரால் புகார் கொடுக்கப்பட்டது.
இதன்பேரில் எஸ்.ஆர். நகர் காவல்துறையினர் விசாரித்ததில், ஃபாத்திமா - இம்தியாஸ் இருவரும் திருமணம் செய்துகொண்டதை அறிந்தனர். மேலும், புதுமண தம்பதியை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அதன்பிறகு இருவீட்டாரையும் அழைத்து காவல்துறையினர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் அங்கிருந்து இம்தியாஸ் மற்றும் ஃபாத்திமா, மாப்பிள்ளையின் வீட்டிற்கு ஒரு காரில் சென்றுள்ளனர். அவர்களை ஃபாத்திமாவின் குடும்பத்தினர் பின் தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில், எரகடா சிக்னலில் கார் நின்றுகொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்துகொண்டிருந்த ஃபாத்திமாவின் தந்தை, அவரது சகோதரன் உள்பட 9 பேர் சேர்ந்து காரில் இருந்த இம்தியாஸை கத்தியால் குத்த முயற்சித்தனர். இதையடுத்து வாகனத்தில் இருந்து வெளியே ஓடிய இம்தியாஸை, சாலையில் துரத்திச் சென்று கத்தியால் கடுமையாகத் தாக்குகினர். தன்னை விட்டு விடுமாறு கெஞ்சியும் அந்த கும்பல் தங்களது வெறியாட்டத்தைத் தொடர்ந்தனர். இதனை சாலையில் செல்லும் நபர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு செல்கின்றனர்.
இந்தத் தாக்குதலில் இம்தியாஸுக்கு தலை மற்றும் உடம்பு பகுதியில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். கத்தியால் குத்தும் சம்பவங்கள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது.
In @asadowaisi's Hyderabad, which he boasts for Law and order situation, and Accuses others of not maintaining law order... Fatima's Brother seen Killing Imtiaz on Broad daylight.
Where is Fundamental Right to marry of one's choice, law & order in Telangana? @TelanganaCMO pic.twitter.com/w6ZfjjTp6B
— Mrutyunjay Joshi (@MrutyunjayNJ) June 8, 2019
@khanumarfa @rahulkanwal @fayedsouza Hyderabad.
SR Nagar Mei Din Dahade Sadak Per Imtiyaz Naam Wale Navjavan Per Filmi_Andaaz Mei Qatilana Humle Ka Video. pic.twitter.com/pp3RYL49yr
— Mohtashim Akram (@Mohtashim_Akram) June 7, 2019