‘2000 கிமீ நடந்து வீட்டுக்கு வந்த மகன்’.. கண்ணீர் மல்க கட்டியணைத்த தாய்.. அடுத்த சில நிமிடத்தில் நடந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

2000 கிலோமீட்டர் நடந்து வீட்டுக்கு வந்த புலம்பெயர் தொழிலாளியை பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘2000 கிமீ நடந்து வீட்டுக்கு வந்த மகன்’.. கண்ணீர் மல்க கட்டியணைத்த தாய்.. அடுத்த சில நிமிடத்தில் நடந்த சோகம்..!

உத்தர பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தை சேர்ந்தவர் சல்மான் கான் (23). இவர் பெங்களூரில் கட்டுமான வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது ஊரடங்கு அமலில் உள்ள்தால் வேலை இல்லாமல் தவித்து வந்த அவர், தனது நண்பர்களுடன் சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்துள்ளார். ரயில் பயணிக்க முடிவெடுத்து டிக்கெட் கிடக்காததால் நடந்தே ஊருக்கு சென்றுள்ளனர்.

12 நாட்களில் சுமார் 2000 கிலோமீட்டர் நடந்து சொந்த ஊரை சல்மான் கான் அடைந்துள்ளார். நீண்ட நாள்களுக்கு பிறகு மகனை சந்தித்த மகிழ்ச்சியில் சல்மான் கானின் தாய் கண்ணீர் மல்க கட்டி அரவணைத்து வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அவருக்கு அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. நடந்த வந்த களைப்பில் இருந்த சல்மான் கான் வீட்டுக்கு அருகில் உள்ள கரும்பு தோப்பில் கை, கால்களை கழுவுவதற்காக சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாக அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அவரது தாய் கரும்பு தோப்புக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது தனது மகனை பாம்பு கடித்து இறந்து கிடப்பதைப் பார்த்த அதிர்ச்சியில் அவரும் அங்கே மயங்கி விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பல்வேறு இன்னல்களை கடந்து சுமார் 2000 கிலோமீட்டர் தூரம் பயணித்து வீடு வந்த இளைஞரை பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்