‘இருதரப்பினரிடையே மோதல், விபரீதத்தில் முடிந்த சம்பவம்’!.. அதிர வைக்கும் காரணம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் பட்டப் பகலில் இருதரப்பினருக்கு இடையே துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.
டெல்லியின் தென் மேற்கு பகுதியில் உள்ள துவார்கா மோட் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் இருதரப்பினருக்கு இடையில் நேற்று (19/05/2019) பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் இருவர் இறந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று மாலை பர்வீன் கெலோட் என்பவர் சென்று கொண்டிருந்த காரை, மற்றொரு காரில் வந்த சிலர் வழிமறித்துள்ளனர். இதையடுத்து, பர்வீன் கெலோட் காரை வழிமறித்த கும்பல் கெலோட் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர்.
இந்நிலையில், துப்பாக்கி சத்தம் கேட்டதையடுத்து அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்த காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீது போலீசார் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, இந்த துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட கெலோட் மற்றும் விகாஸ் மீது டெல்லி மற்றும் ஹரியானா காவல் நிலையத்தில் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற இரண்டு நபர்கள் தப்பி ஓடிவிட்டதாகவும். இச்சம்பவம் சொத்து தகராறால் நடந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தப்பித்து சென்றவர்களை கண்டுபிடுத்துவிட்டதாகவும், அவர்களை பிடிக்கும் பணியில் போலீஸ் குழுவை முடுக்கிவிட்டுள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக பிந்தாபூர் காவல் நிலையத்தில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.