‘உஷ்.. சத்தம் போடாதீங்க..எடை கொறஞ்சிடும்.. இது ரேர் பீஸ்’..மண்ணுளி பாம்பை கடத்த முயற்சித்த கும்பல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மண்ணுளி பாம்புகளை கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் பல்கார் மாவட்டத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மண்ணுளி பாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. Sand Boa எனப்படும் மண்ணுளிப் பாம்புகளுக்கு புற்றுநோயை குணப்படுத்தும் சக்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பாம்பில் உள்ள வெள்ளை அணுக்கள் புற்று நோயை எதிர்க்கும் தன்மை கொண்டது என உறுதிபடுத்தப்படாத தகவல் பரவியுள்ளது.
இந்நிலையில், அதிக எடை கொண்ட மண்ணுளி பாம்புகள் பல லட்சம் ரூபாய்க்கு கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மண்ணுளி பாம்புகளை கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், அவர்களிடம் இருந்த மண்ணுளி பாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவம், அழகுசாதன தயாரிப்பு உள்ளிட்டவைகளுக்கும் மண்ணுளி பயன்படுத்தப்படுகிறது. இதனால் மண்ணுளி பாம்புகளுக்கு சர்வதேச சந்தையில் டிமாண்ட் அதிகம் என்பதால் அவை அதிக விலைக்கு விற்பனையாகின்றது.