'உருமாறிய கொரோனாவுக்கு எதிராக...' 'இந்த மருந்து சூப்பரா வேலை செய்யுது...' - ஒப்பதல் அளித்த மத்திய அரசு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா வைரஸ் எதிர்ப்பு சக்திக்கு டி-டியோக்ஸி டி-குளுகோஸ் (2-டிஜி) மருந்தை அவசரக்காலத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

'உருமாறிய கொரோனாவுக்கு எதிராக...' 'இந்த மருந்து சூப்பரா வேலை செய்யுது...' - ஒப்பதல் அளித்த மத்திய அரசு...!

கொரோனா வைரஸிற்கு எதிராக தண்ணீரில் கலந்து சாப்பிடும் 2-டிஜி மருந்தை, டிஆர்டிஓ-அமைப்பின் ஆய்வகமான இன்ஸ்ட்டியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைட் சயின்ஸ் (ஐஎன்எம்ஏஎஸ்), டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.

இந்நிலையில் டிஆர்டிஓ தயாரித்த இந்த 2-டிஜி மருந்தை கடந்த 1-ம் தேதி அவசர காலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள டிசிஜிஐ அனுமதி அளித்தது.

பவுடர் வடிவில் இருக்கும் இந்த மருந்தை, தண்ணீரில் கலந்து குடிக்கும் போது, இது உடலில் சென்று வைரஸால் பாதிக்கப்பட்ட செல்களை அடையாளம் கண்டுபிடித்து ஒருங்கிணைத்து, புதிதாக எந்த செல்களும் பாதிக்கப்படாமல் தடுத்து, வைரஸ் வளர்ச்சியையும் தடுக்கிறது.

அதோடு, பொட்டலங்களில் கிடைக்கும் இந்த மருந்து, தொற்றிலிருந்து விரைவில் குணமடையவும் ஆக்சிஜன் தேவையைக் குறைக்கவும் உதவிகரமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

தற்போது பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக இந்த 2-டிஜி மருந்து எப்படி வேலை செய்யும் என்பது பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன் முடிவாக, உருமாறிய கொரோனாவுக்கு எதிராகவும் 2-டிஜி மருந்து திறம்பட செயல்படுவதாக முதல்கட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்