'என்னயா விளையாடக் கூடாதுன்னு சொல்றீங்க'... மகன் செய்த செயல்... அதிர்ச்சியில் உறைந்த தாய் !
முகப்பு > செய்திகள் > இந்தியாபப்ஜி விளையாட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் அதற்கு அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. இது வளரும் இளம் பருவத்தினரை மிகவும் பதிப்பதாகவும், இதனால் நிறைய குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதாகவும் குற்றசாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த நிலையில், ஈரான், நேபாளம் போன்ற நாடுகள் பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பப்ஜி விளையாடக்கூடாது என தாய் திட்டியதால் 17 வயது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவின் ஜிண்ட் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் பப்ஜி விளையாட்டில் மூழ்கி அதற்கு அடிமையாகியுள்ளான். இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போக, அவனது தாய் அந்த சிறுவனை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சிறுவன் தனது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். சிறுவனின் தற்கொலை அவனது தாயை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இதனிடையே நடந்த சம்பவம் குறித்து பேசிய சிறுவனின் தந்தை ''அதிக நேரம் பப்ஜி விளையாட வேண்டாம் எனது மனைவி கண்டித்துள்ளார். அவனது செல்போனையும் பிடுங்கிவைத்துள்ளார். இதற்காக இப்படி ஒரு விபரீத முடிவை எனது மகன் எடுப்பான் என நினைக்கவில்லை'' என வேதனையுடன் குறிப்பிட்டார்.