"வட்டிக்கடையில வேலை பார்த்தவங்க போல..." கோடிக்கணக்கில் அபராதம் வசூலித்த 'டிக்கெட் கலெக்டர்ஸ்'... "எப்பா, 'கின்னஸ் டீம்'... இதெல்லாம் நோட் பண்ணுங்கப்பா..."
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த, 2019ம் ஆண்டில், ரயில் டிக்கெட் பரிசோதகர் ஒருவர், டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்களிடம் இருந்து, 1.51 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளார்.
மத்திய ரயில்வேயின், பறக்கும் படையில் வேலை பார்க்கும், டிக்கெட் பரிசோதகர், எஸ்.பி.கலாண்டே என்பவர்தான் இந்த சாதனையை படைத்துள்ளார். 2019ம் ஆண்டில் மட்டும், டிக்கெட் இல்லாமல் பயணித்த, 22 ஆயிரத்து 680 பயணிகளிடமிருந்து 1.51 கோடி ரூபாய் வரை அபராதமாக வசூலித்திருக்கிறார்.
அவருடன், மேலும், மூன்று டிக்கெட் பரிசோதகர்களும், ஒரு கோடி ரூபாய்க்கும் மேல், அபராதம் வசூலித்துள்ளனர். எம்.எம்.ஷிண்டே, 1.07 கோடி ரூபாயும், டி.குமார், 1.02 கோடி ரூபாயும், ரவிகுமார், 1.45 கோடி ரூபாயும் அபராதமாக வசூலித்துள்ளனர். அவர்களின் பங்களிப்பை பாராட்டி, ஊக்கத்தொகையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
TICKET COLLECTOR, 1.51 CRORES, WITHOUT TICKET, RAILWAY