கடந்த 'ஒரே மாசத்துல' மட்டும் 'இவ்வளவு' பேருக்கு வேலை போயிடுச்சா...! 'வேலை தேடுறவங்க எண்ணிக்கையும் அதிகரிப்பு...' - அதிர வைக்கும் 'சர்வே' முடிவுகள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு தொழில் துறைகள், பணிகள் முற்றிலுமாக முடங்கி காணப்படுகிறது.
வேலையிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தவாறு உள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு தொழில்கள் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பினாலும், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவில்லை.
இந்த நிலையில், கடந்த மே மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1.5 கோடி இந்தியர்கள் வேலையிழந்திருப்பதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் சர்வே முடிவுகள் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் பணியாற்றியவர்கள் எண்ணிக்கை 39 கோடியாக இருந்தது. மே மாதத்தில் 37 கோடியாக குறைந்தது. இந்த வேலையிழப்பானது, ஜூலை 2020 முதல் அடைந்த அனைத்து லாபங்களையும் துவம்சம் செய்து விட்டது.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், கொரோனா 2-வது அலை பல லட்சம் இந்தியர்களைப் பாதித்ததால், மாதச்சம்பளம் மற்றும் சம்பளமற்ற வேலைகளில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2.3 கோடி குறைந்தது. மேலும் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் வைரஸ் பரவுவதைத் தடுக்க தளர்வுகளற்ற ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தன.
வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை உயர்ந்த அதேசமயம், தீவிரமாக வேலை தேடும் நபர்களின் எண்ணிக்கை 1.7 கோடி உயர்ந்து, மொத்த எண்ணிக்கை 5.07 கோடி ஆனது. இந்த சர்வே முடிவுகள் அதிர்ச்சி தரும்படியாக உள்ளது.
மற்ற செய்திகள்