திருமண வரவேற்பின்போது கேட்ட அலறல் சத்தம்.. ஒரே நொடியில் தலைகீழாக மாறிய வாழ்க்கை..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் நிபுவா நவ்ரங்யா என்ற கிராமத்தில் நேற்று திருமணம் ஒன்று நடைபெற்றிருக்கிறது. மேலும், நேற்று இரவு வரவேற்பு நிகழ்ச்சியையும் நடத்தி இருக்கிறார்கள் கல்யாண வீட்டினர்.

திருமண வரவேற்பின்போது கேட்ட அலறல் சத்தம்.. ஒரே நொடியில் தலைகீழாக மாறிய வாழ்க்கை..!

சிதம்பரம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்ட பெண்..பின்னணி என்ன?

தடபுடல்

வரவேற்பு நிகழ்ச்சிக்கு மணமகன் மற்றும் மணமகள் தரப்பில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வந்து இருந்தனர். கூட்ட நெரிசல் காரணமாக வீட்டின் பின்புறம் இருந்த கிணற்றின் மீது அமர்ந்து இருந்திருக்கிறார்கள். அந்த கிணற்றின் மேல் பகுதியில் இரும்பு வலையால் ஆன கான்கிரீட் மேடை அமைக்கப்பட்டிருந்தது. இதனால் அது தங்களது எடையை தாங்கும் என நினைத்த மணமகள் வீட்டார் சுமார் 20 பேர் அந்த கிணற்றின் மேல் போடப்பட்டு இருந்த கான்கிரீட் மேடையில் அமர்ந்து இருந்திருக்கிறார்கள்.

திடீரென்று கேட்ட சத்தம்

அப்போது, கிணற்றின் மீது போடப்பட்டு இருந்த கான்கிரீட் தளம் பாரம் காரணமாக திடீரென்று உடைந்து விழுந்தது. இதனால் தளத்தின் மீது நின்றுகொண்டிருந்த பெண்கள் அனைவரும் ஆழமான கிணற்றுக்குள் விழுந்தனர்.

இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன் கிணற்றுக்குள் விழுந்தவர்களை மீட்க போராடியிருக்கிறார்கள். மேலும், உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர்.

13 People die at Marriage Reception in Uttarpradesh

13 பேர் பலி

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, 15-க்கும் அதிகமான பெண்கள், சிறுமிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.  ஆனால், கிணற்றுக்குள் விழுந்ததில் படுகாயமடைந்து 13 பெண்கள் சம்பவ இடத்திலேயே நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேதபரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த பெண்களை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் 13 பெண்கள் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் மிகப்பெரிய கம்பெனிகளால் தேடப்படும் இந்தியர்.. ரியல் கொசக்ஸி பசப்புகழ் இவர்தான்..!

PEOPLE DIE, MARRIAGE RECEPTION, UTTARPRADESH, திருமணம், வரவேற்பு நிகழ்ச்சி, உத்தரபிரதேச மாநிலம்

மற்ற செய்திகள்