RRR Others USA

பத்மஸ்ரீ விருது நிகழ்வில் பிரதமர் முன் விழுந்த 126 வயது முதியவர்.. யார் இந்த சுவாமி சிவானந்தா?..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லியில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் 126 வயதான சுவாமி சிவானந்தா இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் முன்பு சிரம் தாழ்ந்து வணங்கியிருக்கிறார். பதிலுக்கு பிரதமர் மோடியும் சிரம் தாழ்ந்து அவருக்கு வணக்கம் தெரிவித்திருக்கிறார். இது அங்கிருந்தவர்களை நிகழ்ச்சியில் ஆழ்த்தியது.

பத்மஸ்ரீ விருது நிகழ்வில் பிரதமர் முன் விழுந்த 126 வயது முதியவர்.. யார் இந்த சுவாமி சிவானந்தா?..

ஒரே ஒரு சின்ன Change.. 600 கோடி லாபத்தை அள்ளிய ஆப்பிள் கம்பெனி.. ஓஹோ.. இதுதான் அந்த சீக்ரெட்டா..!

பத்ம விருதுகள்

பல்வேறு துறைகளில் சாதனை படைத்த நபர்களை கௌரவிக்கும் விதமாக மத்திய அரசு பத்ம விருதுகளை ஆண்டுதோறும் வழங்கிவருகிறது. இதன்படி இந்தாண்டு 128 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இவற்றுள் நான்கு பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 17 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 107 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

126 years old swami sivanandha Receives Badmashri award

சுவாமி சிவானந்தா

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்தவர் சுவாமி சிவானந்தா. இவருடைய வயது 126 ஆகும். இவருக்கு இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதை அளிப்பதாக மத்திய அரசு முன்னரே அறிவித்திருந்தது. யோகா கலையில் வல்லவரான சிவானந்தா, தினமும் பல்வேறு யோகாசனங்களை செய்து வருகிறார். மேலும் தனது சீடர்கள் மூலமாக யோகாசனத்தை உலகமெங்கிலும் இவர் பரப்பி வருகிறார். இவருடைய சாதனையை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை அளிப்பதாக அறிவித்தது.

126 years old swami sivanandha Receives Badmashri award

சிரம் தாழ்ந்து வணங்கிய சிவானந்தா

நேற்று நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட சுவாமி சிவானந்தா இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் முன்பாக சிரம் தாழ்ந்து வழங்கினார். இதனைக் கண்ட பிரதமர் மோடி சிவானந்தாவிற்கு தனது சிரம் தாழ்ந்த வணக்கத்தினை தெரிவித்தார். பின்னர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கும் சுவாமி சிவானந்தா சிரம் தாழ்ந்த வணக்கம் தெரிவித்தார். இது அங்கு இருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

126 years old swami sivanandha Receives Badmashri award

இந்திய வரலாற்றில் பத்ம விருது வென்றவர்களில் மிக வயதானவர் சுவாமி சிவானந்தா தான். யோகாசனத்தில் வல்லவரான இவர் 'யோக் சேவக்' என்று மக்களால் கொண்டாடப்படுகிறார்.

அவங்க இல்லான்னா என்ன.. 3 தரமான ப்ளேயர்ஸை குறைஞ்ச ரேட்டுக்கு எடுத்திருக்கோம்.. சிஎஸ்கே கோச் சொன்ன சூப்பர் தகவல்..!

OLD MAN, SWAMI SIVANANDHA, BADMASHRI AWARD, PRESIDENT, RAM NATH KOVIND

மற்ற செய்திகள்