'நடிகர், நடிகைகளுக்கு போதை மருந்து சப்ளை!'.. நடிகை ராகினி திவேதி உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

போதைப்பொருள் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நடிகை ராகினி திவேதி உள்பட 12 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

'நடிகர், நடிகைகளுக்கு போதை மருந்து சப்ளை!'.. நடிகை ராகினி திவேதி உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு!

கன்னட திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில் ராகினி திவேதி, இவ்வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். முதல் குற்றவாளியாக தயாரிப்பாளர் சிவபிரகாஷ் மீது வழக்கு பதிவாகியது. அதன் பின்னர் டெல்லியில் விரேன் கன்னா என்பவரை கைது செய்த போலீசார் அங்கிருந்து விமானம் மூலம் அவரை பெங்களூருக்கு அழைத்து வந்தனர்.

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் பாடகர்களுக்கு போதை பொருள் விவகாரத்தில் பங்கு இருப்பதாக கூறப்படும் நிலையில், சிங்களவர் ஒருவரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்நிலையில்தான் இவர்தான் நடிகர் நடிகைகளுக்கு போதை பொருள் சப்ளை செய்தவர் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனிடையே நடிகை ராகினி திவேதியின் ஜாமீன் மனு நாளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கிறது.

மற்ற செய்திகள்