ஒட்டுமொத்த இந்தியாவிலும்... இந்த '11 பகுதிகளில்' மட்டும்... கொரோனா பாதிப்பு 'ரொம்பவே' அதிகம்... நம்ம ஊரு 'லிஸ்ட்ல' இருக்கா?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா வைரஸ் கடுமையாக அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியாவிலும் நாளுக்கு நாள் இந்த கொடிய தொற்று மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஒட்டுமொத்த இந்தியாவிலும்... இந்த '11 பகுதிகளில்' மட்டும்... கொரோனா பாதிப்பு 'ரொம்பவே' அதிகம்... நம்ம ஊரு 'லிஸ்ட்ல' இருக்கா?

இந்நிலையில், உலகளவில் கொரோனா வைரஸ் மூலம் அதிக பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ஈரானை பின்னுக்கு தள்ளி இந்தியா பத்தாவது இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 7,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக இதுவரை இந்தியாவில் 1,38,526 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி, மத்தியப்பிரதேசம், மேற்கு வங்காளம், ராஜஸ்தான் ஆகிய 7 மாநிலங்களுக்கு உட்பட்ட 11 நகராட்சி பகுதிகளில் மட்டும் 70 சதவீதம் பேர் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் இந்தியளவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக சுமார் 50,000 பேருடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. குஜராத்தில் இதுவரை சுமார் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களில் நாள்தோறும் சராசரியாக 700 பேர் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக, சென்னையில் மட்டும் 500 பேர் பாதிப்படைந்து வருகின்றனர்.

அதே வேளையில், கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 41 சதவீதம் (57,721) பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்