"ஆஹா.. இது அதுல்ல.".. 10-ம் வகுப்பு தேர்வில் மாணவன் எழுதிய புஷ்பா பட டயலாக்?.. வைரல் புகைப்படம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தேர்வில் புஷ்பா படத்தில் வரும் பிரபல வசனத்தை எழுதியதாக சொல்லப்படும் சம்பவம் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

"ஆஹா.. இது அதுல்ல.".. 10-ம் வகுப்பு தேர்வில் மாணவன் எழுதிய புஷ்பா பட டயலாக்?.. வைரல் புகைப்படம்..!

வீட்டுக்குள் கேட்ட பயங்கர சத்தம்... சென்னையில் நடந்த Money heist.. ரைடு விட்ட சென்னை போலீஸ்..!

புஷ்பா

பிரபல தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுனின் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி வெளியாகி மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை பெற்ற படம் புஷ்பா. இதில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் அனுசியா உட்பட பலர் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளிவந்து வெற்றிபெற்ற இந்தப் படத்தை சுகுமார் இயக்கியிருந்தார். ஆந்திரா பகுதியில் விளையும் அரிய வகை மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

10th standard student wrote Pushpa Movie dialogue in exam

வைரல்

இந்த படம் வெளிவருவதற்கு முன்பே இப்படத்தின் பாடல்கள் வைரலாக சமூக வலை தளங்களில் பரவின. முன்னணி நடிக, நடிகையர் இன்ஸ்டா ரீல்ஸில் பாடல்களுக்கு நடனமாட படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு உயர்ந்தது. அதே போலவே, படத்தின் வசனங்களும் இணைய வெளிகளில் தீயாய் பரவின.

10th standard student wrote Pushpa Movie dialogue in exam

வசனம்

புஷ்பா படத்தின் முக்கிய அங்கமாக கருதப்படுவது அதன் வசனங்கள். அதிலும் "புஷ்பா, புஷ்பராஜ் அடங்காதவன்" மற்றும் "புஷ்பா-ன்னா பிளவர் னு நெனச்சீங்களா ஃபயரு" போன்ற வசனங்கள் ரசிகர்களை  கவர்ந்தன. ஆஸ்திரலிய கிரிக்கெட் வீரர் வார்னே இந்த டயலாக்கை பேசி வீடியோ ஒன்றினை வெளியிட்டது அப்போது வைரலானது.

தேர்வு

இந்நிலையில், சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் 10 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு நடைபெற்றது. இதில் ஒரு மாணவர் புஷ்பா படத்தில் வருவதை போல "புஷ்பா, புஷ்பராஜ் விடை எழுதப்போவதில்லை" என எழுதியதாக கூறப்படுகிறது. இது பலரையும் திகைக்க வைத்திருக்கிறது. சமூக வலை தளங்களில் இதுகுறித்து நெட்டிசன்கள் பரபரப்புடன் பேசிவருகின்றனர்.

10th standard student wrote Pushpa Movie dialogue in exam

மேலும், தேர்வு தாள் முழுவதும் அந்த மாணவன் இதே வசனத்தை எழுதியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், அந்த தேர்வு தாள் எனக்கூறப்படும் ஒரு புகைப்படம் சமூக வலை தளங்களில் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே , இது உண்மையில்லை எனவும் கவனத்தை ஈர்க்கும் விதமாக சிலர் இந்த புகைப்படங்களை பரப்பிவருவதாகவும் நெட்டிசன்கள் சிலர் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

"யாரு சாமி இவன்… கொஞ்ச நேரத்துல மிரட்டிட்டான்” – முதல் போட்டியிலேயே தரமான சம்பவம் செய்த RCB வீரர்

PUSHPA MOVIE, PUSHPA MOVIE DIALOGUE, EXAM, STUDENT, WEST BENGAL, மாணவன், புஷ்பா பட டயலாக்

மற்ற செய்திகள்