பாட்டியின் செயினை குறிவைத்த மர்ம நபர்.. 10 வயது பேத்தி செஞ்ச தரமான சம்பவம்.. திகைச்சு போய்ட்டாங்க எல்லோரும்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மகாராஷ்டிரா மாநிலத்தில் தனது பாட்டியிடம் இருந்து செயினை பறிக்க முயற்சி செய்த மர்ம நபரை தடுத்து, அவர்களிடம் இருந்து தனது பாட்டியை காப்பாற்றியிருக்கிறார் 10 வயது சிறுமி ஒருவர். இதனையடுத்து அந்த சிறுமியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

பாட்டியின் செயினை குறிவைத்த மர்ம நபர்.. 10 வயது பேத்தி செஞ்ச தரமான சம்பவம்.. திகைச்சு போய்ட்டாங்க எல்லோரும்..!

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன் திட்டம்.. தங்களது ஒருநாள் ஊதியத்தை அளிக்க முன்வந்த ஐஏஎஸ் அதிகாரிகள்..!

ருத்வி

மகாராஷ்ட்ரா மாநிலத்தின் புனே பகுதியை சேர்ந்தவர் நிதின் காக். ஆட்டோ மொபைல் கராஜ் ஒன்றை நிதின் நடத்தி வருகிறார். இவருடைய மகள் ருத்வி. அருகில் இருக்கும் பள்ளியில் ருத்வி 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி ​​ருத்வி தனது பாட்டி லதா (60) மற்றும் தங்கை ஞானேஸ்வரி (6) ஆகியோருடன் தனது அத்தை வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் மூவரையும் வழிமறித்திருக்கின்றார்.

இதனால் பாட்டி லதா அச்சமடைந்த நிலையில், இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் லதாவின் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயற்சித்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த ருத்வி தனது கையில் இருந்த பேக்கை கொண்டு அந்த மர்ம ஆசாமியை விடாமல் தாக்கியிருக்கிறார். இதனால் நிலைகுலைந்த அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்று மறைந்திருக்கிறார்.

10 YO Girl saved her Grand Mother from chain Thieves

Images are subject to © copyright to their respective owners.

பாராட்டு

இந்நிலையில் இதுகுறித்து பேசிய காவல்துறை துணை ஆணையர் சந்தீப் சிங் கில், “கொள்ளை முயற்சி நடந்த உடனேயே குடும்பத்தினர் வழக்குப் பதிவு செய்யவில்லை. ஆனால் சம்பவம் எங்கள் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்ட பிறகு, புகார்தாரரிடம் வழக்குப் பதிவு செய்யும்படி கேட்டுக் கொண்டோம். அவர்கள் வியாழக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்த நிலையில் அப்போதே விசாரணையைத் தொடங்கினோம். சிறுமியின் துணிச்சலும் மன உறுதியும் பாராட்டுக்குரியது. நாங்கள் அவரை நேரில் அழைத்து பாராட்ட இருக்கிறோம்" என்றார்.

துணிச்சல்

இதனிடையே ருத்வியின் தந்தை நிதின் இந்த சம்பவம் பற்றி பேசுகையில்,"என் அம்மா எப்போதும் போனை பையில் வைத்திருப்பார். தாக்குதல் நடந்தபோது ருத்வி இந்தப் பையை வைத்திருந்தார்.

10 YO Girl saved her Grand Mother from chain Thieves

Images are subject to © copyright to their respective owners.

சமயோசிதமாக யோசித்து அந்தப் பையை ஆயுதமாகப் பயன்படுத்த அவர் நினைத்திருக்கிறார். கைகலப்பில் என் அம்மா தரையில் விழுந்து சிறு காயம் அடைந்தார். எதுவும் திருடப்படவில்லை என்பதால் போலீசார் முதலில் எஃப்ஐஆர் பதிவு செய்யவில்லை. ஆனால் இன்று எங்களை அழைத்து கொள்ளை முயற்சி வழக்கு பதிவு செய்யும்படி காவல்துறையின் வலியுறுத்தினர். அதன்படி வழக்கு பதிவு செய்துள்ளோம்" என்றார்.

இந்நிலையில், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியுள்ள காவல்துறையினர் கொள்ளையடிக்க முயற்சித்தவர்களை வலைவீசி தேடிவருகின்றனர். இதனிடையே துணிச்சலாக செயல்பட்ட சிறுமி ருத்வியையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Also Read | வாத்தி.. இளம் வீரர்களுக்கு பேட்டிங் டிப்ஸ் கொடுத்த தோனி.. வைரலாகும் வீடியோ..!

GIRL, GRAND MOTHER, CHAIN THIEVES

மற்ற செய்திகள்